Lovers Cafe In Thanjavur | Thanjavur Trending Places
Lovers Cafe Near Me: காதலை கொண்டாடும் ரொமாண்டிக் கஃபே
காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் காதலர்களும், காதலிகளும் ரொமேண்டிக் இடத்தை தேர்ந்தெடுப்பது வழக்கம் தான். அப்படி காதலர்களுக்கான ஒரு இடமாக அமைந்துள்ளது இந்த கஃபே.
உங்களுடைய காதலர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு நன்றாக பொழுதை கழிக்க சிறந்த இடம் தான் இது. அந்த வகையில் இந்த கஃபே அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.
தஞ்சையை சேர்ந்த பிராபாகரன் வீரராஜ், நிஷாந்த் இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலர்களுக்காக ஒரு கஃபே திறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கடையை திறந்துள்ளனர்.
இதை செயல்படுத்தும் வகையில் "க்யூபிட்ஸ் கார்னர்" என்ற பெயரில் கடையை திறந்து அதில் காதலர்களை கவரும் வகையில் பல லவ் சிம்பிள்ஸ்களை கடையில் வைத்து இருக்கிறார்கள்.
பாரிஸ் நகரத்தில் காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக "லவ் லாக் தியரி" யை பின்பற்றுவார்கள். இதை செயல்படுத்தும் விதமாக கஃபேவில் "லவ் லாக் தியரி" யை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இங்கே வருகிற காதலர்கள் அவர்களது பெயரை பூட்டில் எழுதி லாக் செய்து விட்டு செல்கின்றனர். இதில் சில காதலர்களின் காதல் திருமணம் வரை செல்வதால் இந்த கடை மிகவும் பிரபலமாகி உள்ளது.
இதை பார்த்த "சிங்கிள்ஸ்"எங்களுக்கும் தனிக்கடை அமையுங்கள் என கடை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனராம். இந்த கஃபே தற்போது தஞ்சையில் கவனிக்கும் இடமாக மாறி வருகிறது.
இந்த கஃபேவுக்கு காதலர்கள் மட்டுமில்லாமல் நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரும் வருகிறார்கள். இந்த கடை தஞ்சாவூர் மாவட்டம் நிர்மலா நகர் பகுதியில் க்யூபிட்ஸ் கார்னரில் அமைந்துள்ளது.