Tap to Read ➤

புத்தாண்டும் அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் உணவுகளும்

பல நாடுகள் தங்களின் தனித்துவமான வழிகளில் பண்டிகைகளை கொண்டாடுகின்றன. சில நாடுகளில் புத்தாண்டில் இந்த உணவுகளை உண்பது அதிர்ஷ்டத்தை தருவதாக நம்புகின்றனர். அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க


பச்சை நிற காய்கறிகள்

புத்தாண்டு தினத்தன்று முட்டைக்கோஸ் அல்லது கீரை போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பண அதிர்ஷ்டத்தை தருவதாக சில நாடுகள் நம்புகின்றனர்.ஏனெனில் அவை பணத்தைப் போல தோற்றம் அளிக்கின்றன.
வெண்ணெய் தடவிய பிரட்

அயர்லாந்தில் புத்தாண்டு தினம் வெண்ணெய் தடவிய ரொட்டியின் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டின் முன் கதவுக்கு வெளியே வைக்கப்படும் வெண்ணெய் தடவிய ரொட்டி வீட்டில் பசியின்மையை போக்குவதாக அவர்கள் நம்புகின்றனர்.
திராட்சை

ஸ்பெயினில் உள்ள மக்கள் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் 12 திராட்சைகளை சாப்பிடுகிறார்கள். ஒரே நேரத்தில் 12 திராட்சைகளை சாப்பிடக்கூடாது, பச்சை திராட்சை மட்டுமே சாப்பிட வேண்டும். 12 திராட்சைகள் வருடத்தின் 12 மாதங்களைக் குறிக்கின்றன.
மாதுளை

ஒரு பழத்தை நசுக்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று உங்களால் நம்ப முடியுமா. புத்தாண்டின் தொடக்கத்தில் தங்கள் வீட்டு வாசலில் ஒரு மாதுளையை நசுக்குவது அவர்களின் வாழ்க்கையில் நிறைய அதிர்ஷ்டத்தைத் தருவதாக கிரேக்க மக்கள் நம்புகிறார்கள்.
நீளமான நூடுல்ஸ்

 ஆசிய கலாச்சாரத்தில் உ
டைக்கப்படாத நூடுல்ஸை வறுத்து சாப்பிடுவது புத்தாண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாக நம்பப்படுகிறது. ஒரு நீண்ட நூடுல்ஸை மெல்லாமல் அல்லது உடைக்காமல் சாப்பிடக் கூடியவர்கள் நீண்ட ஆயுளை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
பருப்பு வகைகள்

 பருப்புகள் பார்ப்பதற்கு சிறிய நாணயங்களைப் போன்று காட்சி அளிப்பதால், இவற்றை புத்தாண்டில் சாப்பிடுவது செல்வத்தைக் கொண்டு வரும் என்பதாக இத்தாலிய மக்கள் நம்புகிறார்கள்.
முழு மீன்

சீன மக்கள் புத்தாண்டில் தலை முதல் வால் வரை முழு மீனை சாப்பிடுகின்றனர். இது அவர்களுக்கு செழிப்பு, வளம் மற்றும் வர இருக்கும் ஆண்டை நல்ல ஆண்டாக மாற்றுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.