Tap to Read ➤

மாட்டுப் பொங்கல் தமிழர்களுக்கு ஏன் ஸ்பெஷல் ?

தமிழர்களின் மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த பண்டிகை பொங்கல் திருநாள். பொங்கல் பண்டிகை போகி, தை பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
பொங்கல் பண்டிகை தமிழர்களின் வாழ்க்கை முறையோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது. பண்டைய காலத்திலிருந்து தமிழக மக்களால் பாரம்பாியமாக ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் தொடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
மாட்டுப் பொங்கல், கன்றுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் என்றும் கூறப்படுகிறது. விவசாயத்திற்கு துணையாக இருக்கின்ற கால் நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பண்டிகை ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
மாட்டுப் பொங்கல் வரலாறு
காமதேனு என்கிற கற்பக பசுவின் சந்ததிகள் தான் பசுக்கள். அவை மனிதர்களுக்கு பல வழிகளில் பல நன்மைகளை தருவதனால் அவற்றினை கோமாதா தெய்வம் என்று கூறி தமிழர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
மாட்டு பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும்?
தொழுவத்தினைச் சுத்தம் செய்து கோலமிட வேண்டும்
 கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டும்
 கால்நடைகளின் கொம்புகளை சீவி வண்ணம் பூச வேண்டும் கால்நடைகளுக்கு திரு நீறு பூசி, மஞ்சள் மற்றும் குங்குமப் பொட்டு இட வேண்டும்
 புதிய மூக்கணாங் கயிறு மற்றும் மாலைகளையும் அணிவிக்க வேண்டும்
பொங்கலோ பொங்கல்
தொழுவத்திலேயே சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் செய்யப்படும். பின் தீப ஆராதனை காட்டி பசு, காளை, எருமை மற்றும் ஆடு என விவசாயத்திற்கு உதவும் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கலும், வாழைப் பழமும் கொடுப்பார்கள். அப்போது 'பொங்கலோ, பொங்கல்' என்று கூறி கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டுவது அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்யும்.
மாடுகளின் மகத்துவம்
மனிதர்களின் வாழ்வில் பல வழிகளில் மாடுகள் இணைந்துள்ளன
 மாடுகள் பால், தயிர், மோர், நெய் என அனைத்தையும் தருகின்றன
 மாடுகள் மனிதர்களின் உணவு, ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன
 பசுவை வீட்டினுள் அழைத்து வந்தால், செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது