மலச்சிக்கல் பெரும் சிக்கல் - மலச்சிக்கலை நீக்கும் எண்ணெய் வகைகள்
மலச்சிக்கல் ஒரு அஜீரணக் கோளாறு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மலச்சிக்கல் வரும். இதற்கு
பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கவனித்து சரி செய்ய வேண்டும்.
உடலில் இருந்து கழிவுகள் சரியான முறையில் வெளியேறவில்லை என்றால் உடல் உபாதைகள் ஏற்படும்.
இது அசௌகரிய உணர்வு, எரிச்சல், மற்றும் வயிறு மந்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதற்கு உடனடி தீர்வாக எண்ணெய்களை பயன்படுத்துங்கள். இந்த எண்ணெய்களை வீட்டில் எப்போதும் வைத்திருங்கள். மலச்சிக்கலை போக்கும் எண்ணெய் வகைகள் எவை என்பதை இதில் பார்ப்போம்.
இஞ்சி எண்ணெயை, சூடான தண்ணீரில் இரண்டு சொட்டு விட்டு நன்றாக கலக்க வேண்டும்.
அதில் ஒரு காட்டன் டவலை முக்கி தண்ணீரை இறுத்து விட்டு, அந்த டவலை அடி வயிற்றில் கட்டி 15 நிமிடங்கள் வைத்து இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
பெப்பர் மிண்ட் எண்ணெய்யை வெது வெதுப்பான நீரில் கலந்து, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
இது குளிர்ச்சியானது என்பதால் உடல் வலிக்கும் நல்லது. இதனால் மலச்சிக்கல் இலகுவாகும்.
மஞ்சள் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவார்கள். அப்படி இல்லை எனில், தினமும் சாப்பிடும் உணவில் சிறிதளவு ஊற்றி சாப்பிட்டு
வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இதனால் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
வெந்தைய எண்ணெய்யை, தேங்காய் எண்ணெயுடன் இரண்டு சொட்டு சேர்த்து அடி வயிற்றில் மசாஜ் செய்தால் வயிறு
இலகுவாகி மலச்சிக்கல் நீங்கும். ஒரு 5 நிமிடங்கள் கடிகார சுழற்சி முறையில் மசாஜ் செய்ய வேண்டும் .
எலுமிச்சை எண்ணெய்யை, எடுத்து அடி வயிற்றில் சூடு பறக்க தேய்த்தால் வயிறு இலகுவாகி மலச்சிக்கல் நீங்கும்.
எலுமிச்சை எண்ணெய்யில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உள்ளது. இது ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
விளக்கெண்ணையை காய்ச்சி, அதை அடி வயிற்றில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் படுக்க வேண்டும்.
அப்போது வயிறு இறுக்கமாக கல் போல் இருந்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி விடும்.