Tap to Read ➤

உடல் எடை குறைக்கும் விஷயத்தில் செய்ய கூடாத தவறுகள்

2023 ஆம் ஆண்டு வந்து விட்டது. பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கோலோடு இருப்பார்கள். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
இல்லை என்றால், உடல் எடையை குறைக்க முடியாமல் போய் விடும். அதிலும் குறிப்பாக இந்த விஷயங்களை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
1) உடல் எடையை குறைக்கும் போது நல்ல உணவை எடுத்துக் கொள்ள அல்லது உடல் பயிற்சியை மேற்கொள்ள சரியான நாள் அல்லது சரியான நேரம் பார்ப்பது மிகவும் தவறாகும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் சரியான நாளுக்கோ அல்லது சரியான நேரத்திக்கோ காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
2) எடை இழப்பு என்பது எண்களை சார்ந்தது அல்ல. அதாவது, 50,55,60 என்ற அளவுகளில் இருப்பது தான் சரியான எடை என்று நினைப்பது. இப்படி நினைத்து பலரும் உடல் எடை குறைப்பதை ஒரு விளையாட்டாக மாற்றிவிட்டனர்.
3) உடல் எடையை குறைக்க தொடங்கும் நாளில் இருந்தே, புரதச்சத்து நிறைந்த உணவை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக அதிக அளவில் எடுத்துக் கொள்ள கூடாது. அதே சமயம், டயட் என்ற பெயரில் குறைவாகவும் எடுத்து கொள்ள கூடாது.
4) பலரும் உடல் எடையைக் குறைக்க வியர்வை சிந்தி, கடினமாக உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இறுதியில் கலோரிகளை பற்றி சிந்திக்காமல், அதிக கலோரிகள் நிறைந்த அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடுகிறார்கள்.ஆய்வுகளின் படி பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 கலோரிகளும், ஆண்களுக்கு 2,500 கலோரிகளும் இருந்தாலே போதும்.
5) உடல் எடையை குறைப்பதில், தினசரி வாழ்க்கையில் மேற்கொள்ளும் அன்றாட பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இரவில் நேரம் கழித்து தூங்கி, பகலில் அதிக நேரம் தூங்குவது உடல் எடையை குறைப்பதில் எந்த மாற்றத்தையும் தருவதில்லை. ஆகவே தூக்க நேரத்தை சரி செய்ய வேண்டும். ஒருவர் 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும்.
6) புதியதாக உடற்பயிற்சியை செய்ய தொடங்குபவர், பயிற்சியாளரிடமிருந்து ஆலோசனையைப் பெற்று, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியையும், நேரத்தையும் அதிகரிக்க வேண்டும். உடல் எடையைக் சீக்கிரம் குறைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான உடற்பயிற்சியை செய்ய கூடாது.