மௌன ராகம் சீரியல் நடிகை சக்தியின் ட்ரெண்டிங் போட்டோக்கள்...
ரவீனா, 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற தமிழ் சீரியலின் மூலம் தனது 4 வயதில் நடிப்பைத் தொடங்கினார்.
தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யா கிருஷ்ணனாக நடித்து இருந்தார் ரவீனா தாஹா
இவர் 2014 இல் வெளியான விஜயின் ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
மேலும் இவர் 2017 இல் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து இருந்தார்.
ராட்சசன் திரைப்படத்தில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் கூட இவர் தான் நடித்திருந்தார்.
தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனை போலவே இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
விரைவில் வெளியாக உள்ள பீட்சா 3 படத்திலும் ரவீனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளாராம். நல்ல கதையம்சம் உள்ள படம் அமைந்தால் வெள்ளித் திரையில் ஹீரோயினாகவும் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்
ரவீனாவிற்கு மேக் -அப் போடுவது மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான ரவீனா தாஹா, போட்டோஷுட் , வீடியோக்கள் என ஏதாவது ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
ரவீனா தாஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியன் நபர்கள் பின் தொடர்கின்றனராம்