முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்க்கும் கடந்த 2022 டிசம்பர் 30 ஆம் தேதி அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ஆனந்த் அம்பானி ஏப்ரல் 10 ஆம் தேதி 1995 இல் முகேஷ் அம்பானி,நீடா தம்பதியருக்கு, மூன்றாவது பிள்ளையாக பிறந்தார்.
ஆனந்த் அம்பானி, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தனது பள்ளி படிப்பையும் மற்றும் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலை கழகத்தில் தனது பட்டப் படிப்பையும் முடித்தார்.
ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன் எரிசக்தி வணிகத்தை வழி நடத்தினார். இது அம்பானிகளின் முதலீட்டின் முக்கிய பகுதியாகும்.
ஆனந்த் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்களின் இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ( Reliance Retail Ventures Limited ) இன் இயக்குநராக உறுதி செய்யப்பட்டு தற்போது அதன் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆனந்த் அம்பானியின் கைவசம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது தாயார் நீத்தா அம்பானியும் தான்.