Tap to Read ➤

ஸ்மார்ட் டிவி வாங்க போகிறீர்களா, அப்போது இது உங்களுக்கு உதவும்

One Plus TV 65 Q2 Pro
One Plus நிறுவனம் சியோமி, சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி ஒன் பிளஸ் நிறுவனம் மாடல் One Plus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது .
ஒன் பிளஸ் 11 5 ஜி No Settle மொபைல் போன் மற்றும் ஒன் பிளஸ் Buds Pro 2 சாதனங்களுடன், இந்த புதிய One Plus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவியும் வெளி வர உள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் சிறப்பு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
விரைவில் அறிமுகமாகும் One Plus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி QLED பேனல் மற்றும் 4K ஆதரவை கொண்டு வெளி வர இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
One Plus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை கொண்டு உள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
One Plus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவி, Dolby Atmos 70 வாட்ஸ் ஸ்பீக்கரை கொண்டு உள்ளது. இந்த அம்சம் ஒரு நல்ல தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும். மேலும் இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது.
கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் போன்றவற்றை இந்த ஒன் பிளஸ் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் நெட்பிலிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் YouTube போன்ற பல செயலிகளையும் இயக்க முடியும்.
One Plus TV 65 Q2 Pro ஸ்மார்ட் டிவியில் குவாட்- கோர் பிராசஸர் வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆப்ஸ்களை தங்கு தடையின்றி இயக்க முடியும்.