ஆரஞ்சு பழத்தில் பெக்டின் எனப்படும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை நீக்குகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.Start typing...
பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கும்
ஆரஞ்சில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன, இவை கண் வியாதிகளைத் தடுக்கின்றன.
ஆரஞ்சில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபைபர் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஆரஞ்சில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, சருமத்தை இளமையாக இருக்க செய்கிறது.
அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆரஞ்சில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் மூட்டு வீக்கத்தைக் குறைக்கும்.
ஆரஞ்சில் இருக்கும் டி-லிமோனீன் நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.
இப்பழத்தில் இருக்கும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து, குடல் மற்றும் வயிற்றின் செயல்பாடுகளை சீராக வைக்க உதவுகிறது.