Tap to Read ➤

பாண்டிச்சேரியில் தொடங்கப்பட்ட பாராகிளைடிங்

சென்னைக்கு அருகில் இருக்கும் சில அருமையான சுற்றுலாத் தலங்களில் பாண்டிச்சேரியும் ஒன்று பல ஊர்களில்  இருந்து வாரந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பாண்டிச்சேரிக்கு வருவது வழக்கம்.
பிரெஞ்சு கால கட்டிடங்கள் , ஆசிரமங்கள், கஃபேகள், பப்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பாண்டிச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை
கூடுதலாக தற்போது பாண்டிச்சேரியில் பாராகிளைடிங் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
பாண்டிச்சேரியில் காந்தி சிலை கடற்கரையில் இருந்து 2 கிமீ தூரத்தில், புதிய கலங்கரை விளக்கம் அருகில் பாண்டிச்சேரியின் மெரினா அமைந்துள்ளது.
நன்கு பயிற்சி பெற்ற பைலைட்டின் உதவியுடன் "பேரா மோட்டரிங்" மூலம் இயக்கப்படும் பாராசூட் சாகச பயணம் பாண்டிச்சேரியின் மெரினாவில் சென்ற வாரம் புதிதாக தொடங்கப்பட்டது.
பாண்டிச்சேரியின் மெரினா கடற்கரையில் இருக்கும் இந்த பாராகிளைடிங் மூலம் வானத்தில் சுமார் 10 நிமிடம் பறந்து கடற்கரை அழகை ரசித்து மகிழ முடியும் .
பாண்டிச்சேரியின் மெரினாவில் தொடங்கும் இந்த பாராகிளைடிங் பழைய துறைமுகம் வழியாக சென்று மீண்டும் கடற்கரையை வந்து சேரும்.
பாராகிளைடிங்க்கு முன்பதிவு செய்ய கடற்கரையில் சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்ய முடியும். 10 நிமிட பயணத்துக்கு கட்டணமாக ரூ. 4,500 வசூலிக்கப்படுகிறது.