Tap to Read ➤

போகி பண்டிகை ஏன் தை பொங்கலுக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது?

போகி பண்டிகை தான் பொங்கல் கொண்டாட்டத்தின் தொடக்கமாக இருக்கிறது. இது தமிழகத்தின் மிக முக்கியமான கொண்டாட்டம் ஆகும்.
இது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் போகி. அதாவது பயனற்ற பழையனவற்றை வெளியேற்றி, புதியதை பெறுவது ஆகும்.
நமது எதிர்மறையான விஷயங்களை நெருப்பால் எரித்து , நேர்மறையான விஷயங்களை பெற்று கொள்வதே போகியின் முக்கிய நோக்கம்.
போகி பண்டிகை
போகி என்பது பசுவின் சாணம், மரக்கட்டைகள் மற்றும் பழைய தேவை இல்லாத குப்பைகள் அனைத்தையும் நெருப்பில் வீசும் ஒரு நடைமுறை ஆகும்.

 இந்த நாளில் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளையடிக்கப்பட்டு, மா இலைகளால் அலங்கரிக்கப்படும். வீட்டின் வாசலில் கோலம் போடப்படும்.
போகி பல்லு
போகி பல்லு என்பது ஒரு சடங்கு.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, பழங்கள் மற்றும் சிறிது பணத்தை குழந்தைகளுக்கு கொடுத்து பூஜை செய்யப்படும்.

இவ்வாறாக போகி பல்லு கொண்டாடப்படுகிறது .
பிரசாதம்
பூஜைக்குப் பிறகு,
போளி ( பருப்பு அல்லது வெல்லத்துடன் தயாரிக்கப்பட்ட தேங்காய் பலகாரம் ) கடவுளுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

பின் வாழை இலையில் மிகவும் சுவையான உணவும் பரிமாறப்படுகிறது.