தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி பொங்கல். இந்த நாளில் தேவை இல்லாத பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடுவார்கள்
பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாள் சூரிய பொங்கல். இந்த நாளில் பொங்கல் தயாரிக்கப்பட்டு சூரிய பகவானுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் மாட்டுப் பொங்கல். இந்த நாளில் பொங்கல் தயாரிக்கப்பட்டு கால்நடைகளுக்கு கொடுத்து நன்றி செலுத்தப்படும்.
பொங்கல் பண்டிகையின் நான்காவது நாள் காணும் பொங்கல். இந்த நாளில் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவர்.
தை பொங்கல் அன்று ஏன் சூரிய பகவான் வழிபடபடுகிறார். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றி இதில் பார்க்கலாம்.
- சூரிய பகவான்- பொங்கல் பண்டிகையின் முக்கிய கடவுள் சூரிய பகவான். பொங்கல் பண்டிகையின் அனைத்து சடங்குகளும் சூரிய பகவானை வணங்குவதை சுற்றியே நடைபெறும்.
- பொங்கல் கோலம் - பூஜை செய்யப்படும் இடம் நன்கு சுத்தம் செய்யப்பட்டு கோலம் போடப்படுகிறது. இங்கே சூரியனின் முகம் கோலமாக போடப்படும் . மேலும் மாடு,கரும்பு, பொங்கல் மற்றும் பொங்கல் பானை போன்றவற்றையும் வரைவார்கள்.
- பொங்கல் உணவு - சூரிய பூஜையில் பொங்கல் உணவு மிக முக்கியமான பகுதி. இந்நாளில் பொங்கல் பிரத்யேகமாக வீட்டிற்கு வெளியே செய்யப்படுகிறது. மூன்று கரும்பு குச்சிகளை ஒன்றாக கட்டி விதானம் அமைக்கப்பட்டு, ஒரு பானையில் பொங்கல் சமைக்கப்படும்.
- சூரிய பூஜை - பூஜையின் போது சூரிய அஷ்டோத்திரமோ, காயத்ரி மந்திரமோ சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும். இது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக செய்யப்படுகிறது.