Tap to Read ➤

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்ல பலன் கிடைக்கும்

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. அறுவடை பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது
பொங்கல் பண்டிகை இந்திரனுக்கும், சூரியனுக்கும் மற்றும் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை அன்று அறுவடை செய்த புதிய பச்சரியைக் கொண்டு பொங்கல் வைப்பார்கள். புதிய பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி, பானையைச் சுற்றி விபூதியை பூசி, மஞ்சள் குங்குமம் இட்டு பானையை அலங்கரிப்பார்கள்.
பானையில் பாலும், நீரும் ஊற்றி அடுப்பில் வைத்து பொங்கல் வைப்பார்கள். அப்போது பொங்கலோ பொங்கல் என்று கூறி சூரியனை நோக்கி வணங்குவது தான் தமிழர் பண்பாடு.
பொங்கல் பொங்கும் போது, அந்த பால் எந்த திசையை நோக்கி பொங்கி வழிகிறதோ, அந்த திசையை வைத்து அந்த ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்று நமது முன்னோர்கள் கணித்து கூறியுள்ளனர்.
பொங்கல் எந்த திசையை நோக்கி பொங்கினால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பற்றி இதில் காண இருக்கிறோம்
பொங்கல் "கிழக்கு" திசையை நோக்கி பொங்கினால், வீடு அல்லது நிலம் வாங்கும் பேச்சு ஏதேனும் இருந்தால், அது நல்ல படி நடக்கும். எதையாவது வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தால், அதை விரைவில் வாங்குவீர்கள். மேலும் ஆடை, ஆபரணங்களும் சேரும் வாய்ப்பு இருக்கிறது .
பொங்கல், "மேற்கு" திசையை நோக்கி பொங்கினால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பொங்கல், "வடக்கு"  திசையை நோக்கி பொங்கினால், பண வரவு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் ,வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பொங்கல், "தெற்கு" திசையை நோக்கி பொங்கினால் வரும் ஆண்டில் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இந்த வீட்டில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு சற்று தாமதமாகவே திருமணம் நடக்கும்.