Ponniyin Selvan 2 First Single | Ponniyin Selvan 2 Release Date Tamil
Ponniyin Selvan Part 2: காதலர் தினத்தில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 பர்ஸ்ட் சிங்கிள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 , ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் போன்றவற்றை படக்குழுவினர் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய்,கார்த்தி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியானது. வரலாற்று பின்னணியில் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
மணிரத்னம் அவர்களின் கனவுப்படமான "பொன்னியின் செல்வன்" நீண்ட முயற்சிகளுக்கு பிறகே எடுக்கப்பட்டது. தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தை லைகாவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார்.
முன்னணி நடிகர்களின் நடிப்பை இப்படத்தில் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருந்தார், மணிரத்னம். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் முன்னதாகவே எடுக்கப்பட்டது. இதன் சிஜி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் முன்னோட்டமாக, படத்தின் ஜெயம் ரவியின் காதல் பாடல் இந்த பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலாக ஜெயம் ரவி - சோபிதா துலிபாலாவின் காதல் பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான பிரமோஷன் ஒரு மாதத்திற்கு முன்னதாக துவங்கி முழு வீச்சில் நடத்தப்பட்டது. அதேபோல், இரண்டாவது பாகத்திற்கான பிரமோஷனையும் படக்குழு நடத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.