Best Propose Day Wishes: காதலை எப்படியெல்லாம் சொல்லி வெளிப்படுத்தலாம். தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வருடம் 365 நாட்கள் காதலர்களுக்கு இடையே அன்பு இருந்தாலும், காதலர் தினம் என்பது எப்போதும் ஸ்பெஷல் .
காரணம் பிப்ரவரி 14 ஆம் தேதி தான் காதலர் தினம் என்றாலும் ஒரு வாரம் முன்னதாகவே காதலர் தினத்திற்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
நேற்று ரோஸ் டே கொண்டாடப்பட்ட நிலையில், இன்று ப்ரபோஸ் டே கொண்டாடப்பட இருக்கிறது. இப்படியெல்லாம் காதலை சொல்லலாம்
என யோசிப்பவர்கள் கூட காதலை சொல்லும் போது பல நேரங்களில் சொதப்புவதும் உண்டு.
காதலர் தினத்தின் இரண்டாம் நாளான ப்ரபோஸ் டே இன்று கொண்டாடப்படும் நிலையில், இன்றைய
நாளில் உங்கள் காதலருக்கு எப்படியெல்லாம் ப்ரபோஸ் செய்யலாம் என்று பார்க்கலாம்.
எதிர் பாராத நிகழ்வுகளே காதலின் மறக்க முடியாத தருணமாக இருக்கும். காதலை வெளிப்படுத்துவதை பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக ப்ரபோஸ் செய்யுங்கள் .
உங்கள் கைகளால் செய்த பொருள் அல்லது விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை பரிசளித்து காதலை வெளிப்படுத்துங்கள்.
சினிமாவில் வரும் வசனத்தையோ அல்லது பிறர் பேசுவதையோ உங்கள் காதலரிடம் சொல்லி காதலை வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படுத்துவதே நல்லது.
பலரும் காதலை நேரில் சொல்லாமல் போனில் அல்லது அடுத்தவர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கிறார்கள். நேரில் சென்று ப்ரபோஸ் செய்வதே சிறந்தது.
தொலை தூரத்தில் இருப்பவர்கள் சரியான வாக்கியங்கள் அமைந்த க்ரீட்டிங் கார்டுகள் மற்றும் புகைப்படங்களை உங்கள் காதலருக்கு அனுப்பி காதலை வெளிப்படுத்தலாம்.
காதலை சொல்லும் இடம் ரொம்ப முக்கியம். அதுவும் உங்கள் காதலருக்கு பிடித்த இடம் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். சரியான இடத்தை தேர்வு செய்து, சரியான நேரத்தில் காதலை வெளிப்படுத்துங்கள்.