PVR Cinemas Chennai Airport | Airport Movie Theater
PVR Grand Galada Chennai: இந்தியாவிலேயே முதல் முறையாக ஏர்போர்ட்டில் தியேட்டர் வர போகிறது? எங்கே தெரியுமா?
விமான நிலையங்களில், விமானத்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் போதெல்லாம், இங்கு தியேட்டரோ,
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸோ இருந்தால் நன்றாக இருக்குமே என பலரும் யோசித்து இருப்பார்கள்.
அந்த யோசனை செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி
செலவில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், திரையரங்கம், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை விமான நிலையத்தில் தியேட்டர்
அமைக்கப்பட்டு இருப்பது தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் திறந்து வைக்கப்பட்டது.
இது விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் பொழுது போக்கிற்காக பயன்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு இந்த திரையரங்குகள் நிச்சயம்
சிறந்த பொழுது போக்கு அம்சமாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ஐந்து திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் 1,150 பேர் படம் பார்க்கலாம். சென்னை விமான நிலையத்தில்
இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம்
திரையரங்கோடு மற்ற வசதிகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. கட்டி முடிக்கப்பட்டுள்ள
உணவு விடுதிகள் மற்றும் சில்லறை கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.