Tap to Read ➤

Rose Day Date 2023 | Happy Rose Day Wishes For My Love

Rose Day Wishes For Love: ரோஸ் டே அன்று காதலிக்கு எந்த கலர் ரோஜா கொடுக்கணும் தெரியுமா?
பிப்ரவரி மாதம் வந்தாலே, வாரத்தின் இரண்டாவது வாரம் திருவிழா போல கலை கட்ட தொடங்கி விடும். காரணம் ரோஸ் டேயில் தொடங்கி வேலண்டைன்ஸ் டே வரை காதலர் தினம் ஒரு வாரம் கொண்டாடப்படும்.
காதலர் தினத்துக்கு எப்படி வரலாறு இருக்கிறதோ, அதே போல், ரோஸ் டேக்கும் வரலாறு உண்டு. விக்டோரியன் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தங்களது அன்பை பரிமாறி கொள்ள அடையாளமாக தொடங்கப்பட்டது தான் ரோஸ் டே.
பல வண்ணங்களில் மலர்கள் இருந்தாலும் ரோஜாக்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. காலம் காலமாக காதலுக்கு ஒரு அடையாளமாக பார்க்கப்படுவது இந்த ரோஜாக்கள் தான்.
காதல் மட்டுமின்றி அன்பு, அமைதி என எல்லாவற்றிற்கும் ரோஜாக்கள் ஒரு அடையாள சின்னமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை துவக்கி வைப்பது இந்த ரோஜாக்கள் தான்.
இந்த நாளில் பிடித்தவர்களுக்கு பல வண்ணங்களில் ரோஜாக்களை கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். காதலர் தினத்தில் ஒவ்வொரு நிற உடைக்கும் எப்படி அர்த்தம் இருக்கிறதோ, அதே போல் ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.
சிகப்பு ரோஜா

ஆழ்ந்த காதல் உணர்வு மற்றும் ஆழமான உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது
பிங்க் ரோஜா

மனமார்ந்த பாராட்டு மற்றும் அங்கீகாரத்தை வெளிப்படுத்துகிறது
மஞ்சள் ரோஜா 

 உறுதியான, உடைக்க முடியாத காதல் பந்தத்தை வெளிப்படுத்துகிறது
ஆரஞ்சு ரோஜா

அளவு கடந்த காதலை வெளிப்படுத்துகிறது
வெள்ளை ரோஜா

 எளிமையான அன்பு மற்றும் நன்றியை வெளிப்படுத்துகிறது
பீச் ரோஸ்

காதலில் கூச்சம் மற்றும் தயக்கத்தை வெளிப்படுத்துகிறது
லாவெண்டர் ரோஜா

பார்த்தவுடன் காதலில் விழுந்தேன் என்பதை வெளிப்படுத்துகிறது