Tap to Read ➤

இது தான் சரியான பொங்கல் பரிசு

புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்த கையோடு தள்ளுபடி வழங்கிய Samsung
பொங்கல் பண்டிகை வர இருக்கிற நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சாதனங்களை அறிமுகம் செய்தும் அதற்கு சிறப்புச் சலுகைகளையும் வழங்கிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் சாம்சங் நிறுவனமும் ஒரு அட்டகாசமான புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து கையோடு அதற்கு தள்ளுபடியும் வழங்கி உள்ளது.
சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி f04 ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் வரும் ஜனவரி 12-ம் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது. அறிமுக சலுகையில் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த கேலக்ஸி f04 ஸ்மார்ட் போனை ரூ.7,499 விலையில் வாங்க முடியும்.
Z பர்பில் மற்றும் ஓபல் கிரீன் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி f04 ஸ்மார்ட் போனை வாங்க முடியும்.
சாம்சங் கேலக்ஸி f04 ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்களை பற்றி விரிவாக இதில் பார்க்கலாம் .
1) 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி f04, 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே வசதியை பெற்று உள்ளது. மேலும் இது 720 x 1560 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளி வந்து உள்ளது.
2) மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட்
சாம்சங் கேலக்ஸி f04, மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட் போனை இயக்குவது மிகவும் அருமையாக இருக்கும் மற்றும் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளி வந்து உள்ளது இந்த ஸ்மார்ட் போன்.
3) டூயல் ரியர் கேமரா
சாம்சங் கேலக்ஸி f04 ஸ்மார்ட் போன் 13 MP மற்றும் 2 MP டெப்த் சென்சார் டூயல் ரியர் கேமராவை பெற்று உள்ளது. இதன் மூலம் அருமையாகப் புகைப் படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 5 MP கேமராவுடன் வர இருக்கிறது. இதை தவிர LED பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டு உள்ளது.
4) மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் வசதியை பெற்று உள்ள இந்த சாம்சங் கேலக்ஸி f04 ஸ்மார்ட் போன், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டு உள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் பெற்று உள்ளது.
5) பாஸ்ட் சார்ஜிங் வசதி
5000 M.a.h பேட்டரி ஆதரவுடன் இந்த கேலக்ஸி f04 ஸ்மார்ட் போன் வர இருக்கிறது. இதனால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுயையும் பெற்று உள்ளது.