பாலிமர் டிவியில் 'இருமலர்கள்' என்ற நெடுந்தொடரில் 'அம்மு' என்ற கதாபாத்திரத்தில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் மிருணாள் தாகூர்
சீரியல் நடிகை என்பதால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. தற்போது, 'சீதா ராமன்' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.
இளம்பெண்களின் கனவு நாயகன் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த முதல் படமே மரண ஹிட். அதுவும் சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்துவிட்டார்
இந்த படத்தில் வரும் பாடல் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டன. ஒரு இராணுவ வீரனாக துல்கர் சல்மானின் எதார்த்தமான நடிப்பு பிரம்மிப்பு. இவருக்காக ஒரு இளவரசியே அனைத்தும் தூக்கியெறிந்துவிட்ட வந்த நூர்ஜகானின் நடிப்பை சொல்ல வார்த்தையே இல்லை