Tap to Read ➤

Soaked Dry Grapes Benefits In Tamil | Benefits Of Dry Grapes

Benefits Of Dry Grapes In Tamil: உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
திராட்சை பழங்களை விட உலர் திராட்சை அதிக ஊட்டச்சத்தை கொண்டுள்ளது. உலர் திராட்சையில் கலோரிகள், புரதச்சத்து, கார்போஹைட்ரேட், ஃபைபர், இரும்புச்சத்து, பொட்டாசியம், , மற்றும் விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.
உலர் திராட்சைகள் உணவுகளில் இனிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. உணவில் உலர் திராட்சைகளை சேர்த்து கொள்ள முடியாவிட்டாலும், அதனை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
2 கப் தண்ணீரில் 150 கிராம் அளவு திராட்சையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த தண்ணீரை நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் உலர் திராட்சை தண்ணீரை வடிகட்டி, மீண்டும் குறைந்த தீயில் சூடாக்க வேண்டும்.

இதன் சுவையை கூட்ட விரும்பினால் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை சேர்க்கலாம். இந்த தண்ணீரை குடித்த பிறகு அடுத்த அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிட கூடாது.
உலர் திராட்சை தண்ணீர் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

  அசிடிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளவர் இந்த தண்ணீரை குடிப்பது வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை ஒழுங்குபடுத்தப்படுத்த உதவும்.
உலர் திராட்சை ஊற வைக்கப்பட்ட தண்ணீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

உலர் திராட்சை தண்ணீர் இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் கெட்ட கொழுப்புகளை நீக்க உதவுகிறது.
உலர் திராட்சை தண்ணீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். இது மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகின்றன. இவை புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகின்றன.

உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் உடலின் இரத்த அழுத்தத்தை சீராக்கி , இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. 

 உலர் திராட்சைப்பழத்தில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
எலும்புகளுக்கு தேவையான கால்சியம் திராட்சையில் நிறைந்துள்ளது. மேலும் இதில் எலும்புகளை உருவாக்க உதவும் போரான் உள்ளது. இதனால் இவை எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

 இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த தண்ணீரை கொடுப்பது நல்ல பலன் கொடுக்கும். ஏனெனில் உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.