Tap to Read ➤

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் - தேசிய இளைஞர் தினம்

ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சரின் சீடனான சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். சுவாமி விவேகானந்தரை பற்றித்தான் இதில் பார்க்க உள்ளோம்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினம் ஆக கொண்டாடப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் கொல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி தம்பதியினருக்கு 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் நாள் பிறந்தார்.
பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நரேந்திர நாத் தத்தா. காலப்போக்கில் இறையுணர்வின் மீது இருந்த ஈடுபாட்டால் அவரது பெயரினை விவேகானந்தர் என்று மாற்றிக் கொண்டார்.
தனது தொடக்க கல்வியை பயிலும் போது மிகச் சிறந்த நினைவாற்றலோடு இருந்து உள்ளார். மேலும் இசை மற்றும் இசைக் கருவிகள் மேல் இருந்த ஈடுபாட்டால் அதனை முறைப்படி கற்றார்.
சிறு வயதிலிருந்தே அவருக்கு தியானத்தின் மீது அதிக நாட்டம் இருந்து வந்து உள்ளது . எனவே தியானத்தினை தொடர்ந்து செய்து வந்தார்.
கல்லூரியில் தத்துவ படிப்பினை தேர்ந்தெடுத்து படித்ததனால் அவருக்கு குறிப்பாக ஆன்மிகம், கடவுள் மற்றும் கடவுள் வழிபாடு போன்ற விடயங்களில் ஒரு தெளிவில்லா நிலை உண்டானது.
ஒரு சமயத்தில் ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சருடன் அவருக்கு சந்திப்பு ஏற்பட்டது. ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சர் கடவுள் வழிபாட்டினை உருவ வடிவமாக போதிக்காமல் உணர்ச்சி வடிவமாக போதித்தார்.
ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சர் இறந்ததும் விவேகானந்தர் உடன் இருந்த சில சீடர்கள் துறவிகளாக மாறினர் . துறவியாக மாறிய இவர்கள் இந்தியா முழுவதும் சென்று தங்களது ஞான அறிவை போதித்தனர்.
கன்னியாகுமரியில் சில காலம் தங்கி கடல் நடுவே ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அந்த இடத்தில் அவரது ஞாபகமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது .
விவேகானந்தர், சிகாகோவில் 1893 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையின் காரணமாக பலர் சீடர்களாக மாறினர்.
நான்கு ஆண்டுகள் வெளி நாடு சுற்றுப்பயணத்தில் இருந்த விவேகானந்தர், உலகம் முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் நிறுவி தனது கருத்துக்களை போதித்து வந்தார் .
இந்தியாவில் தனது மடங்களை நிறுவிய விவேகானந்தர், தனது சொந்த ஊரான கல்கத்தாவில் பேலூர் எனும் இடத்திலும் தனது மடத்தினை நிறுவினார். விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 நாள் இறந்தார்.