தாஜ்மஹாலில் நடைபெறும் பிரம்மாண்டமான தாஜ் மஹோத்சவ் திருவிழா - நீங்களும் கலந்து கொள்ளலாம்.
தாஜ்மஹாலை காண வெளி நாடுகளில் இருந்தும், உள் நாட்டிலும் இருந்தும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
முகலாயர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் தாஜ் மஹோத்சவ் கொண்டாடப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தாஜ் மஹோத்சவ் விழாவின் நேரம், தேதி, நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கட்டணம் ஆகிய தகவல்களை இதில் பார்க்கலாம்.
தாஜ் மஹோத்சவ் :
தாஜ் மஹோத்சவ் , இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்கள் மற்றும் கைவினையர்கள் பங்கு பெற்று
தங்களின் கைவினைத்திறன், கலை மற்றும் படைப்புகளை கொண்டாடுவதாகும்.
இந்த திருவிழா 1992 ஆம் ஆண்டு தொடங்கி, அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும்
மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தாஜ் மஹோத்சவ் திருவிழா நடைபெறும் இடம் :
தாஜ் மஹோத்சவ் திருவிழா, ஆக்ராவில் உள்ள கைவினை கிராமம் ஷில்ப்கிராமில் கொண்டாடப்படுகிறது.
ஷில்ப்கிராம், தாஜ்மஹாலில் இருந்து ஒரு மைல் தூரத்தில் தாஜ் மஹாலின் கிழக்கு வாசலில் அமைந்துள்ளது.
தாஜ் மஹோத்சவ் திருவிழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் :
தாஜ் மஹோத்சவ் திருவிழா வருகின்ற பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 27 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த பத்து நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திருவிழா உற்சாகம் குறையாமல் இருக்கும்.
தாஜ் மஹோத்சவ் விழாவில் என்னவெல்லாம் செய்யலாம்:
கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், தரைவிரிப்புகள்,ஆடைகள் போன்ற பொருட்களை வாங்கலாம்.
பிரபலமான கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் அதை கண்டு ரசிக்கலாம்.
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து செய்யப்பட்ட உணவுகளின் ஸ்டால்கள் போடப்பட்டு இருக்கும். அதை வாங்கி சுவைக்கலாம்.
தாஜ் மஹோத்சவ்கான நுழைவுக்கட்டணம்:
பெரியவர்களுக்கு - ரூ 50, 5 முதல் 10 வயது - ரூ 10, 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு - இலவசம், 100 மாணவர்கள் கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு - ரூ 500.
தாஜ் மஹோத்சவ் திருவிழாவுக்கான நுழைவுக்கட்டணத்தை ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.
எப்படி செல்லலாம்?
விமானம் - இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், டெல்லியிலிருந்து ஆக்ராவை அடையலாம்.
ரயில் - டெல்லியை சுற்றியுள்ள முக்கிய மெட்ரோ நகரங்களிலிருந்து ஆக்ராவை அடையலாம்.
சாலை - சாலைகள் வழியாக ஆக்ராவுக்குச் செல்ல வேண்டுமென்றால் , மாநிலங்களுக்கு இடையேயான பேருந்தில் செல்லலாம் அல்லது தனிப்பட்ட வாகனத்தில் செல்லலாம்.