Tap to Read ➤

Teddy Day Wishes In Tamil | Teddy Day Wishes For Love

Teddy Day Wish For My Love: காதல் தினத்தில் நான்காவது நாளில் டெட்டி பியர் டே ஏன் கொண்டாடப்படுகிறது, தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் வந்தவுடன் காதலர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பி விடும். பிப்ரவரி 14 ஆம் தேதியை கொண்டாட காதலர்கள் பல்வேறு திட்டமிடல்களை மேற்கொள்வர். அந்த வகையில் பிப்ரவரி 10 ஆம் தேதி "டெட்டி பியர்" தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
டெட்டிஸ் ஒரு போதும் அவுட் ஆப் ஃபேஷன் ஆகாது, எல்லா காலத்திலும் ட்ரெண்டிங்கில் இருக்கும். டெட்டி பியரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், ஏன் காதலர் தினத்தில் டெட்டி கொடுக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடர் ரோஸ்வெல்ட் ஒருமுறை அவருடைய வேட்டை பயணத்தின் போது விலங்குகளைக் கொல்வதில்லை என்று முடிவு செய்தார். அவரின் நினைவாக ஒரு டெட்டி பியர் வடிவமைக்கப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இது செய்யப்பட்டது.
மேலும் அமெரிக்காவில் பொம்மை கடை வைத்து இருந்த மோரிஸ் மிட்சோம் என்பவர் ஒரு பொம்மையை உருவாக்கி அதற்கு "டெடி பியர்" என்று பெயர் வைத்தார். இதுவே உலகின் முதல் டெடி, இது இங்கிலாந்தில், பீட்டர்ஃபீல்டில் 1984 இல் வைக்கப்பட்டு இன்னும் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
டெட்டி பியர்கள் ஒரு போதும் பூக்களைப் போல காய்ந்து விடாது. பல ஆண்டுகளுக்கு இதை வைத்திருக்க முடியும். காதலை எப்போதும் நினைவூட்டுவதால்,காதலை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த பரிசு பொருளாகும். ஒரு பெரிய அளவிலான டெட்டி பியரை வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.
டெட்டி பியர்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று . இவை உள்ளார்ந்த அழகு மற்றும் விவரிக்க முடியாத அப்பாவித்தனத்தை கொண்டுள்ளன. மேலும் இவை மென்மையானது மற்றும் கள்ளம் கபடம் அற்றது. உறவை மேம்படுத்த காதலருக்கு சிறந்த பரிசாக இதை கொடுக்கலாம்.
பிங்க் நிற டெட்டி ஏற்றுக்கொள்ளுதலை குறிக்கிறது. பிங்க் கலர் டெட்டியை ஏற்றுக்கொண்டால் உங்கள் காதல் ஓகே என்று அர்த்தம்.
சிவப்பு நிற டெட்டியை கொடுப்பது நீங்கள் தெரிவிக்க விரும்பும் அன்பை குறிக்கிறது. இது உறவில் அன்பின் தீவிரத்தை வலுப்படுத்தும்.
ஆரஞ்சு நிற டெட்டியை கொடுப்பது வாய்ப்பை குறிக்கிறது. ஆரஞ்சு நிற டெட்டி கிடைத்தால் காதலில் சீக்கிரம் விழ போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீல நிற டெட்டியை கொடுப்பது பைத்தியக்காரதனத்தை குறிக்கிறது. அதாவது உங்கள் காதலர் உங்களை பைத்தியமாக காதலிக்கிறார் என்று அர்த்தம்.
கிரீன் நிற டெட்டி ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான தொடர்பு மற்றும் அர்ப்பணிப்பை குறிக்கிறது. அதாவது அவர்களுக்காக உங்களை அர்ப்பணிப்பீர்கள் என்று அர்த்தம்