Tap to Read ➤

இளம் பருவப் பெண்கள் தினமும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்

பெரும்பாலும் பெண்கள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளாததால், ஊட்டச்சத்து குறைபாடு அவர்களுக்கு ஏற்படுகிறது. இது மோசமான உடல்நிலை மற்றும் உயிரியல் வளர்ச்சி சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.

 இளம் பருவப் பெண்கள் தங்களது உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்
இரும்புச்சத்து

இளம் பருவப் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இளம் பருவப் பெண்களின் இரத்த சோகை அபாயத்தைத் தடுக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தி, தசை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன் போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:

 சிவப்பு இறைச்சிகள்
 பீன்ஸ்
 கீரை
 ப்ரோக்கோலி
 கடல் உணவு
 உலர் திராட்சை
 முந்திரி
 பேரீச்சம்பழம்
புரோபயாடிக்குகள்

 இளம் பருவ மூளை, வளர்ச்சி குடல் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படுவதால், மன நல கோளாறுகள் பொதுவாக இளமைப் பருவத்தில் ஏற்படுகின்றன. புரோபயாடிக்குகள் உயிருள்ள நுண்ணுயிரிகள் ஆகும். புரோபயாடிக்குகளை எடுத்து கொள்வது பதட்டம், மனநோய் மற்றும் உணவுக் கோளாறுகள் போன்றவற்றைத் சிகிச்சை செய்ய உதவுகிறது.
புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகள்

 தயிர்
 டெம்பே
 காஃபிர்
 கிம்ச்சி
 கொம்புச்சா
 தேநீர்
 மோர்
 வெள்ளரிக்காய் ஊறுகாய்
பழங்கள்

 இளம் வயது பெண்களுக்கு மிகவும் தேவையான உணவுப் பொருட்களில் பழங்கள் ஒன்றாகும். பழங்கள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இவை நீரிழிவு, அதிக எடை மற்றும் உடல் பருமன் போன்ற அபாயத்தை தடுக்கின்றன.
சத்துக்கள் நிறைந்த
பழங்கள்
 
ஆரஞ்சு
 தர்பூசணி வெள்ளரிக்காய் எலுமிச்சை
ஆப்ரிகாட் பழம்
 பப்பாளி
 அவகேடோ
வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ இளம் வயது பெண்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.இது பாலியல் முதிர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் முகப்பரு, தோல் சுருக்கங்கள் மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் தடுக்கிறது.
வைட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகள்

 கேரட்
 பூசணிக்காய் உருளைக்கிழங்கு ப்ரோக்கோலி
 பால் பொருட்கள்
 கிரேப் ஃபுரூட்ஸ் குடைமிளகாய்
முழு தானியங்கள்

 முழு தானியங்களில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஃபோலேட் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவை இருதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கின்றன. மேலும் இவை இரத்த சோகை, மன இறுக்கம் மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகின்றன.
முழு தானிய உணவுகள் :

 பார்லி
 குயினோவா
 பக்வீட்
 சோளம்
 ஓட்ஸ்
 தினை
 பழுப்பு அரிசி