Tap to Read ➤

காலை எழுந்திருக்கும் போதே சோர்வா இருக்க இந்த 4 பழக்கம் தான் காரணமாம்

காலை எழுந்திருக்கும் போது உடல் மிகவும் சோர்வாக இருக்கும். காரணம் பொதுவாக காலையில் எழுந்தவுடன் உடனே மூளை விழித்துக் கொள்ளாது, அதன் கடமைகளை துவங்க சிறிது நேரம் எடுக்கும்.
விழித்த உடன் ஒரு 10 - 15 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை கூட தூக்க சோர்வு நீடிக்கும். இது தொடர்ந்தால் நம் அன்றாட வேலைகளை பாதிக்கும். இதை கண்டறிந்து சரி செய்யாமல் விட்டு விட்டால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழிப்பது மற்றும் தூக்க சுழற்சி மாறி இருப்பது போன்றவையே உடல் சோர்வுக்கு காரணம் ஆகின்றன.
நீல கதிர்கள்
நீல கதிர்கள் நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் , லேப்டாப்கள் போன்றவற்றின் திரையில் இருந்து தான் அதிகமாக நம்மை தாக்குகின்றன. இது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோனை பாதித்து தூக்க சுழற்சியை கெடுக்கிறது.
டீ, காபி
ஒரு நாளில் அதிகமாக டீ, காபி, காபின் கொண்ட சாக்லேட் உட் கொள்வது அல்லது தூங்க செல்வதற்கு முன் இவற்றை எடுத்துக் கொள்வது தூக்கத்தை கெடுக்கும். காபின் மூலக்கூறு மூளையை விழிப்போடு இருக்க செய்து தூங்க விடாமல் செய்து விடும்.
இடம்
தூக்கத்தில் , தூங்கும் இடத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. சுத்தமான மற்றும் நல்ல படுக்கையை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.சத்தம் குறைந்த அல்லது சத்தமே இல்லாத இடத்தில் உறங்குவது முக்கியம். மிதமான வெப்ப நிலை உள்ள இடத்தில் தான் உறங்க வேண்டும்.
தூக்க நோய்
பலருக்கும் தங்களுக்கு தூக்க நோய்கள் இருப்பது கூட தெரிவது இல்லை. தூக்கம் இன்மை , தூக்கத்தில் நடக்கும் வியாதி, தூங்கும் போது இடையில் நமக்கே தெரியாமல் சுவாசம் தடைபடுவது போன்றவையும் கூட உடலில் ஏற்படும் சோர்வுக்கு காரணமாக இருக்கின்றன.