Tap to Read ➤

புத்தாண்டை கொண்டாட தென்னிந்தியாவில் உள்ள சிறந்த முதல் 5 இடங்கள்

புத்தாண்டை கொண்டாட தென் இந்தியாவில் சிறந்த இடங்கள் உள்ளன. அவற்றை உங்களுக்கு எளிதாக்க எங்களிடம் சில பரிந்துரைகள் இதோ
நீங்கள் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டு இருக்கலாம். எங்கு செல்லலாம் என்று யோசிக்கிறீர்களா?

 இந்த புத்தாண்டைக் கொண்டாட தென்னிந்தியாவின் முதல் 5 இடங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
1. பெங்களூர், கர்நாடகா

 இந்த பட்டியலில் பெங்களூர் முதல் இடத்தில் உள்ளது. ஏனெனில் இது "பப் சிட்டி ஆப் இந்தியா" ஆக இருக்கிறது. எனவே 2023 புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு பெங்களூர் சிறந்த தேர்வாக இருக்கும்.புத்தாண்டு தினத்தன்று பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
2. சென்னை, தமிழ்நாடு

பெங்களூர், போன்ற மற்றொரு மெட்ரோ நகரம் சென்னை. நிச்சயமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை ஒரு சிறந்த தேர்வாகும்.பெசன்ட் நகர் பீச் மற்றும் மெரினா பீச்சில், ஏராளமான மக்கள் ஆடி, பாடி, நடனமாடி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.
3. ஃபோர்ட் கொச்சி, கேரளா

கேரளாவில் உள்ள ஃபோர்ட் கொச்சியில், புத்தாண்டின் போது "கொச்சி கார்னிவல்" மூலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்பார்கள். கொச்சி கார்னிவல் டிசம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும்.
4. பாண்டிச்சேரி, தமிழ்நாடு

 இந்த இடத்திற்கு அறிமுகம் தேவை இல்லை. பாண்டிச்சேரி பலருக்கும் கோவாவைப் போன்றது. இங்கு உள்ள ராக் பீச்சிற்குச் செல்லுங்கள், புத்தாண்டு தினத்தன்று நிறைய கச்சேரிகள் மற்றும் பார்ட்டிகள் நடைபெறும். பாரடைஸ் பீச் கூட நியூ இயர் ஈவை கழிக்க ஒரு சிறந்த வழி ஆகும்.
5. வர்கலா, கேரளா

 இந்தியாவின் மற்றொரு கோவா "வர்கலா" என சொல்லலாம். இந்த வர்கலா நாளுக்கு நாள் புகழ் பெற்று வருகிறது. புத்தாண்டு அன்று இதன் கடற்கரையில் ஒரு பண்டிகை நடப்பது போல இருக்கும். புத்தாண்டை கொண்டாட இது சிறந்த இடமாக இருக்கும்.