Turmeric Benefits In Tamil | Turmeric Health Benefits In Tamil
இந்த குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற எந்த தொற்று நோயும் வராமல் தடுக்க இந்த தண்ணீரை குடித்தால் போதும்.
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மசாலாக்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள். பண்டைய காலம் முதல் இன்று வரை மஞ்சள் பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழ்த்தப்பட்ட பல ஆய்வுகளில் மஞ்சள் , உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது .
இந்தியாவில் பல ஆண்டுகளாக மஞ்சள், மசாலா மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
மஞ்சள் நீர், மஞ்சள் பால், மஞ்சள் மற்றும் தேன் கலந்த பானம் குழந்தைகளின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன.
குழந்தைகளுக்கு மஞ்சள் நல்லதா? குழந்தைகளுக்கு மஞ்சள் நீரை குடிக்க கொடுக்கலாமா? என்பது பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சளில் குர்குமின் இருப்பதால், குர்குமின் உடலுக்கு பூஞ்சை , பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது.
மேலும் மஞ்சள் இயற்கையான நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது.
மஞ்சள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
குளிர் காலத்தில் குழந்தைகள் பொதுவாக காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
மஞ்சள் ஆண்டிமைக்ரோபியல் முகவராக காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க , நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மஞ்சள், இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்த கலவையை கொடுக்கலாம்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் கலவை குழந்தைகளின் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மஞ்சள் தண்ணீர் குடிப்பது பிளேக் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
இது அனைத்து கிருமிகளையும் அழித்து வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
குடல் நோய் மற்றும் செரிமான கோளாறுகள் மஞ்சள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
மஞ்சள் பித்த உற்பத்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.
மஞ்சள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், செரிமானம் தொடர்பான வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது.
மஞ்சள் நீர் தயாரித்தல் :
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு கப்பில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்க்க வேண்டும்.
இதை கொதிக்க வைத்த சூடான நீருடன் சேர்க்க வேண்டும். பானத்தை இனிமையாக்க கடைசியில் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ளலாம்.
இறுதியில் நன்றாக கிளறி, வெது வெதுப்பான சூட்டில் பருக வேண்டும்.