Tap to Read ➤

Vaathi Movie Review Tamil | Vaathi Dhanush Movie

Vaathi Movie Review In Tamil: வாத்தி படம் பிப்ரவரி 17 ரிலீசாக இருக்கிறது. இந்த காரணங்களுக்காக "வாத்தி" படத்தை பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிப்ரவரி 17 அன்று ரிலீசாகவுள்ள படம் வாத்தி. தெலுங்கு இயக்குநர் "வெங்கி அட்லூரி" இப்படத்தை இயக்கியுள்ளார்.
மலையாள நடிகை "சம்யுக்தா மேனன்" இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார் . சமுத்திரக்கனி இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளார் தனுஷ். இதே உற்சாகத்துடன் இரட்டை வேடத்தில் "நானே வருவேன்" படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
திருச்சிற்றம்பலம் படம் போலவே "வாத்தி" படத்தையும் வெற்றிப் படமாக்கும் முனைப்பில் உள்ளார் தனுஷ். பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருப்பது இப்படத்தை பார்ப்பதற்கான முதல் காரணமாக இருக்கிறது.
சிறப்பான கல்வியை பெற மாணவர்கள் தகுதி உடையவர்கள் என்ற கருத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் தெலுங்கில் "சார்" என்ற பெயரில் வெளியாக உள்ளது. இது இரண்டாவது காரணமாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டின் போது, இயக்குநர் வெங்கி அட்லூரி, சேவையாக இருக்க வேண்டிய கல்வி, வியாபாரம் ஆகிவிட்டதை "வாத்தி படம்" அழுத்தமாக கூறும் என்று பேசியிருந்தார். இது மூன்றாவது காரணமாக இருக்கிறது.
தனுஷ் மற்றும் சம்யுக்தா இருவரும் இப்படத்தில் ஆசிரியர்களாக நடித்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரி மற்றும் காம்பினேஷன் எப்படி இருக்கிறது என்பதற்காக இப்படத்தை பார்க்கலாம். இது நான்காவது காரணமாக இருக்கிறது.
படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தது. முன்னதாக தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது ஐந்தாவது காரணமாக இருக்கிறது.