Valentine Week Happy Kiss Day | Happy Kiss Day Wishes
Kiss Day Wishes For Lover: பிப்ரவரி 13 கிஸ் டே - முத்தமிடும் போது இதையெல்லாம் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்.
அம்மாவிடம் பெறும் பாச முத்தம் தொடங்கி காதலர்களிடம் பெறும் ஆசை முத்தம் வரை, வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நமக்கு பாச பிணைப்பை உணர்த்தும் ஒன்றாக உள்ளது முத்தம்.
அன்பை பரிமாறி கொள்ள முத்தம் ஒரு சிறந்த விஷயம். காதலர்கள், கணவன் - மனைவி என வரும் போது, முத்தம் ஒரு அழகிய கலையாக பார்க்கப்படுகிறது.
நமக்கும் குறிப்பிட்ட நபருக்கும் உள்ள உறவை பொறுத்து கன்னம், நெற்றி, கைகள், உதடுகள் என முத்தமிடலாம். அன்பு, காதல், பாசம், என பல உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கிறது முத்தம் .
முத்தத்தை பகிர்ந்து கொள்ளும் போது தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
முத்தமிடும் போது நீங்கள் மோசமாக முத்தமிடுபவர் என்று முத்திரை குத்தப்பட்டால், பிறகு அதை மாற்றுவது கடினம். முத்தமிடும் போது தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளை இதில் பார்க்கலாம்.
அதிக எச்சில் அருவெறுப்பை தரும். இப்படியொரு மோசமான சூழ்நிலையில் வாய் இருந்தால் யாரும் முத்தமிட ஆசைப்பட மாட்டார்கள். எனவே முத்தமிட செல்வதற்கு முன் வாயை நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
பேரின்பத்தின் திறவுகோலாக இருக்கும் முத்தத்தை கொடுக்கும் போது அவசர பட கூடாது. கன்னங்களை வருடி கொடுப்பது, செல்லமாக சீண்டுவது போன்ற மென்மையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் .
முத்தமிட ஆரம்பித்தவுடன், மனதை வேறு எங்கோ அலை பாய விடாமல், முத்தம் கொடுக்க வேண்டும். முத்தமிடும் நபரின் முகம், உதடுகள், அன்பு, பாசம் ஆகியவற்றை தவிர வேறு எதுக்கும் இடம் கொடுக்க கூடாது.
முத்தமிடுதல் என்பது இரு இதயங்களின் இணைப்பு . முத்தமிடும் போது உதடுகளால், உதட்டை பற்றி கொண்டு கைகளை தொங்க போட்டு கொண்டு நிற்காமல் . உங்கள் காதலரின் உடலை இறுக்கமாக அணைத்து கொள்ளுங்கள்.