இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின கொண்டாட்டத்தின் முக்கிய ஈர்ப்பு இந்திய ராணுவத்தின் அணி வகுப்பாகும்.
இந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட அணி வகுப்பு டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் தொடங்கி இந்தியா கேட்டில் நிறைவு பெறும்.
இந்த தினத்தில் குடியரசு தலைவர் கொடி ஏற்றுவார்.
இந்திய கடற்படை மற்றும் விமானப்படை போன்றவற்றின் கலாச்சார மற்றும் சமூக பாரம்பரிய
அணி வகுப்புகள் மற்றும் விமான காட்சிகளும் நடைபெறும்.
இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறை கூவலை நினைவுகூற,
ஜனவரி 26 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு குடியரசு தின நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி 1946 ஆம் ஆண்டு நிரந்தர அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான
குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்பு சட்டம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது. பொது மற்றும் திறந்த
அமர்வுகளில் சந்தித்து அரசியலமைப்பு சட்டத்தை ஏற்பதற்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன.
இறுதியாக ஜனவரி 24 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன்
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு சட்டம் கையெழுத்து இடப்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து ஜனவரி 26 ஆம் தேதியை நேரு அமைச்சரவை முடிவு செய்து
அறிவித்தது. 1950 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த 2023 ஆண்டு எகிப்து நாட்டின் அதிபர் அப்தல் பத்தா எல் சிஸி என்பவர் நிகழ்ச்சியின் தலைமை
விருந்தாளியாக இருக்க போகிறார். இவருடன் 180 பேர் கொண்ட குழுவினரும் வருகின்றனர்.