Tap to Read ➤

லிஃப்டில் ஏன் கண்ணாடி வைத்து இருக்கிறார்கள்?

லிஃப்டில் ஏறியதும் எத்தனையாவது மாடிக்கு போகிறோம் என்ற பட்டனை அழுத்துகிறோமோ இல்லையோ , நம் கண்கள் நேரடியாக கண்ணாடிக்கு தான் போகும். லிஃப்ட் சுவற்றில் ஏன் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா ?
நம்முடைய தோற்றத்தைப் பார்க்க, உடை மற்றும் சிகை அலங்காரங்களைச் சரி செய்ய, செல்ஃபி எடுக்கத் தான் என நினைத்தால், நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் என்று அர்த்தம். அதற்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளலாமா?
லிஃப்ட் டிசைன் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இன்ஜினியர்கள், ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள். இந்த நோக்கத்திக்காகவே லிஃப்ட்டில் கண்ணாடி பொருத்தப்படுகிறது.
லிஃப்டிற்குள் அடையாளம் தெரியாத நபருடன் இருக்கும் போது, அவர் என்ன செய்கிறார் அல்லது அவரால் ஏதேனும் அசெளகரியம் வர கூடுமா என்பதை கண்ணாடிகள் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இது கொள்ளை, தாக்குதல் போன்றவற்றில் இருந்து எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது.
அனைத்து லிஃப்ட்களிலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம் என்று ஜப்பான் எலிவேட்டர் அசோசியேஷன் கூறுகிறது. சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் லிஃப்டில் நுழைவதையும் வெளியேறுவதையும் எளிதாக்கும் வகையில் லிப்ட்கள் தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மூடப்பட்ட அல்லது நெருக்கமான அறைகளில் இருக்கும் போது சிலருக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா (மூடிய இடம் பற்றிய பீதி அல்லது இருட்டு பயம்) பதற்றம் மற்றும் பயம் கலந்த மன நிலை உருவாகும். அப்படிப்பட்ட மன ரீதியான பயத்தை தவிர்க்க கண்ணாடி உதவியாக இருக்கும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. இதனால் லிஃப்டில் கண்ணாடி பொருத்தப்படுகிறது.
லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில் அதில் கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை. அப்போது பலருக்கும் கேபிள் கட் ஆகி விட்டாலோ அல்லது பவர் இல்லாமல் லிஃப்ட் பாதியில் நின்று விட்டாலோ நமது நிலை என்னவாகும் என்ற எண்ணம் வர தொடங்கியது. இந்த எண்ணத்தை திசை திரும்பும் முயற்சிக்காகவும் லிஃப்டிற்குள் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.