Tap to Read ➤

பொங்கல் பண்டிகை மட்டும் ஏன் 4 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது?

தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை பொங்கல் திருநாள். பொங்கல் பண்டிகையானது ஒரு அறுவடை திருவிழாவாகும். இதை தைப் பொங்கல் என்றும் அழைப்பார்கள்.இந்த பொங்கல் பண்டிகை மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி, உத்தராயன், லொஹ்ரி மற்றும் சுக்கி ஹப்பா என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையானது பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்கள் நிறைந்த பண்டிகை ஆகும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முக்கியத்துவத்தை கொண்டு உள்ளது. இந்த நான்கு நாட்களும் எதனால் கொண்டாடப்படுகிறது என்பதை இதில் பார்க்கலாம்
1. போகி பண்டிகை
பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் விவசாயத்திற்கு நல்ல மழையை தர இந்திரனை வணங்குவார்கள். இதோடு ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியின் கடைசி நாளன்று வீட்டிற்கு கொண்டு வருவார்கள். மேலும் இந்த நாளில் மக்கள் வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்களை எரித்து, வீட்டை சுத்தம் செய்வார்கள்.
2. தைப் பொங்கல்
பொங்கல் திருநாளின் இரண்டாவது பண்டிகையாக தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும். இந்த நாளில் மக்கள் அறுவடை செய்த புதிய பச்சரியில் பால், வெல்லம் சேர்த்து புதிய பானையில் பொங்கல் வைப்பார்கள். இந்த பொங்கலை படைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவார்கள்.
3. மாட்டுப் பொங்கல்
பொங்கல் திருநாளின் மூன்றாவது பண்டிகையாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால் நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, கால் நடைகளை அழகாக அலங்கரித்து, கழுத்தில் மணிகளைக் கட்டி, பொங்கல் வைத்து அவற்றிற்கு சாப்பிட கொடுப்பார்கள். இந்த நாள் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
4. காணும் பொங்கல்
பொங்கல் திருநாளின் நான்காவது பண்டிகையாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஓய்வின்றி விவசாயம் செய்ததால், ஓய்வு பெறவும் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டும் நடைபெறும்.