பொங்கல் பண்டிகையில் கரும்பு ஏன் வைக்கப்படுகிறது - அதற்கு என்ன காரணம் ?
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் தொடர்ந்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது பொங்கல் மற்றும் கரும்பு. பொங்கல் வைக்கும் போது கரும்பை பொங்கல் பானைக்கு அருகில் வைத்து வழிபடுவார்கள்.
கரும்பு, பொங்கல் பண்டிகையில் இன்றியமையாத ஒரு பொருளாக உள்ளது. பொங்கல் பண்டிகை விவசாயத்தை ஒப்பிட்டு கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை பஞ்ச பூதங்களை ஒப்பிட்டு கொண்டாடப்படுகிறது . கரும்பு பொங்கலில் இன்றியமையாத ஒன்றாக இருப்பதற்கான காரணத்தை பற்றி இதில் பார்க்கலாம்.
கரும்பு, இனிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. பொங்கலின் போது கரும்பு பரவலாக பயன்படுத்தபடுவதற்கு சிவனுடன் தொடர்புடைய ஒரு கதை கூறப்படுகிறது
ஒரு பொங்கல் நாளில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள யானையின் கல் சிற்பத்திற்கு கரும்பு ஊட்ட சிவ பெருமான் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து கோயிலில் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. சிவ பெருமான், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
கரும்பை தவிர மஞ்சள், மாவிலை, ஆவாரம் பூ, வாழை இலை மற்றும் வாழைப்பழம் வைத்தும் இறைவனை வழிபடுகிறார்கள். இது தீமைகளை நீக்கி நன்மைகளை அளிப்பதாக நம்பப்படுகிறது.