காய்ச்சல், சளி போன்றவைகளை குணப்படுத்தும் - வீட்டு மூலிகைகள்
எல்லா பருவங்களிலும், நாம் சில உடல் நல பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். குளிர் காலத்தில் நம் உடலை சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அதிகமாக பாதிக்கின்றன.
இதற்கு எளிய மூலிகைகளை உட்கொள்வதன் மூலம் நிவாரணம் பெற முடியும். குளிர்காலத்தில் நாம் உட்கொள்ள வேண்டிய மூலிகைகள் பற்றி இதில் பார்ப்போம்.
லெமன் தைம்
ஒரு கப் வெந்நீருடன், ஒரு துளி லெமன் தைம் சேர்க்க வேண்டும். இந்த லெமன் தைம்மை ஒரு நாளைக்கு 2-3 முறை தொற்றுநோயைப் பொறுத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாம் விரும்பினால், இதில் சிறிது தேனையும் சேர்த்து கொள்ளலாம்.
சாமந்தி
சாமந்தி வைரஸ் தடுப்பு மற்றும் நோய்த் தொற்றுகளை அழிக்க உதவுகிறது. இரண்டு டீஸ்பூன் சாமந்தி பூ இதழ்களை 750 மில்லி வேக வைத்த தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி, ஒரு நாளைக்கு ஐந்து கப் வரை குடிக்கலாம்.
வோக்கோசு
வோக்கோசு பருவ கால சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. ஒரு கோப்பையில் சூடான நீரை எடுத்து கொண்டு அதனுடன் 1-2 டீஸ்பூன் புதிய வோக்கோசு இலைகளை சேர்த்து 5-7 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும்
துளசி
துளசி இலையில் ஆவியாகும் எண்ணெய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் வைரஸ்கள், தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுகின்றன. இதை தேநீரில் சேர்த்தி பருகலாம் அல்லது அன்றாட உணவுகளில் மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
அதி மதுரம்
அதி மதுரம், குளிர்கால நோய்களுக்கு எதிராக போராடுவதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்த செடியின் வேர் தூள் வடிவில் கிடைக்கிறது. இதை தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம். இது குளிர் காலத்தில் சிறந்த ஆரோக்கியத்தை வழங்கும்.
புதினா இலை
புதினா குளிர்ச்சியான மூலிகை என்பதால், குளிர் காலத்தில் இதை அதிகமாக பயன்படுத்த கூடாது. ஆனால் , இதில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், சளி காரணமாக ஏற்படும் தலைவலிக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.