Tap to Read ➤

குளிர்காலத்தில் ஏற்படுகின்ற முடி உதிர்வும் அதற்கான தீர்வுகளும்

குளிர் காலத்தில் முடி உதிர்வதற்கு வறண்ட மற்றும் குளிர் காற்று காரணமாகின்றன. மாறி வரும் கால நிலைக்கு ஏற்ப, தலைமுடி மற்றும் சருமத்தில் பாதிப்பு ஏற்படும்.
முடி உதிரும் பிரச்சனைகயை தீர்க்க முடியை பராமரிக்க வேண்டும். முடி பராமரிப்பு வழக்கத்தை மாற்றியமைப்பதன் மூலம் முடி உதிர்வை பெருமளவு குறைக்க முடியும்.
குளிர் காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் முடியை வலுவாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.
சூடான நீர் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தும். குளிர்காலத்தில், சூடான நீரில் குளிக்க விரும்பலாம். ஆனால் அவை தலைமுடிக்கு நல்லதல்ல. முடிந்தவரை சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு வெந்நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம்.
எண்ணெய் மசாஜ்கள் செய்வது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. இது முடியை ஆரோக்கியமாகவும் ,வலுவாகவும் மாற்றுகிறது. தேங்காய்,ஆமணக்கு, பாதாம் மற்றும் ஆலிவ் போன்ற எண்ணெய்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கவும் சிறந்தவை.
சீவுவதற்கு முன் தலை முடியை உலர வைக்க வேண்டும்.ஈரமான முடி மிகவும் பலவீனமாக இருக்கும். பலவீனமாக இருக்கும் ஈரமான முடியை சீவினால், முடி அதிகம் உதிரும். குளிர் காலத்தில் முடியின் தண்டு பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கும் , இது இன்னும் அதிக உதிரலை ஏற்படுத்தும்.
குளிர் காலம் பொதுவாக மிகவும் வறண்டது. இது முடி மற்றும் உச்சந்தலையை உலர்த்தும். உலர்ந்த உச்சந்தலையில் பொடுகு மற்றும் அரிப்பு ஏற்படும் . இது கட்டுப்பாடற்ற முடி உதிர்தலை ஏற்படுத்தும். இதற்கு முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.
தலைமுடியை சூரியன் மற்றும் காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். அதிகப்படியான காற்று மாசு மற்றும் சூரிய ஒளி முடியை சேதப்படுத்தி முடி உதிர்தலை ஏற்படுத்தும். இதற்கு பீனிஸ் மற்றும் ஸ்கார்ஃப்களைப் பயன்படுத்தி தலைமுடியை மறைக்க வேண்டும்.
குளிர்காலம் மிகவும் வறண்டதாக இருப்பதால், அடிக்கடி தலைக்கு குளிப்பது முடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றும். தலை முடியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அலசலாம். மற்ற நாட்களில், முடியை சுத்தமாக வைத்திருக்க உலர்ந்த ஷாம்பூவைப் பயன்படுத்தலாம்.
உணவில் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வதற்கு குளிர் காலம் சிறந்த நேரம். ப்ரோக்கோலி, கீரை ,கேரட், ஆரஞ்சு, ஆப்பிள், கிவி மற்றும் திராட்சை போன்றவை தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.