Tap to Read ➤

பொங்கல் நாளன்று ஒவ்வொரு ராசிக்காரரும் தானம் செய்ய வேண்டிய பொருள்கள்

பொதுவாக எந்த ஒரு நல்ல நாளிலும் தானம், தர்மம் செய்வது மிகவும் நல்ல விஷயம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை தானம் செய்வது நல்லது என்பதை இதில் தெரிந்து கொள்வோம்..
இதை தெரிந்து கொண்டு வருகிற பொங்கல் பண்டிகையன்று தான, தர்மம் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேஷ ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று எள், வெல்லம், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை தானம் செய்யலாம்.
ரிஷப ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று ஏழை எளியோருக்கு புதிய ஆடைகளை தானம் செய்யலாம் மற்றும் எள் கலந்த இனிப்புகளையும் தானம் செய்யலாம்.
மிதுன ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று கருப்பு நிற எள்ளு விதைகளை தானம் செய்வது நல்லது, அதிலும் வெள்ளை நிற எள்ளு விதைகளை தானம் செய்வது மிகவும் நல்லது.
கடக ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று எள்ளு, வெல்லம் மற்றும் ஜவ்வரிசி போன்ற உணவுப் பொருட்களை தானம் செய்யலாம்.
சிம்ம ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று புதிய ஆடைகளுடன், எள்ளு, வெல்லம் போன்றவற்றை தானம் செய்யலாம்
கன்னி ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று எண்ணெய், எள்ளு விதைகள் மற்றும் கருப்பு உளுந்து போன்றவற்றை தானம் செய்யலாம்.
துலாம் ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று எண்ணெய், எள்ளு விதைகள், பருத்தி போன்றவற்றை தானம் செய்வது நல்லது.
விருச்சிக ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று அரிசி, எள்ளு போன்றவற்றை தானம் செய்யலாம்.
தனுசு ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று கொண்டைக்கடலை, எள்ளு விதைகள் போன்றவற்றை தானம் செய்வது நற்பலனைத் தரும்.
மகர ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று எள்ளு, ஆடைகள், எண்ணெய் போன்றவற்றை தானம் செய்வது நல்லது.
கும்ப ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று எள்ளு, எண்ணெய், சீப்பு மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானமாக வழங்கலாம்
மீன ராசிக் காரர்கள் பொங்கல் பண்டிகை அன்று, ஜவ்வரிசி, கொண்டைக்கடலை, எள்ளு விதைகள், ஆடைகள் போன்றவற்றை ஏழை எளியோருக்கு தானம் செய்யலாம்.