இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்களா...JioMart 1000 ஊழியர்கள் பணிநீக்கம் | Reliance JioMart Fires Employees

ரிலையன்ஸ் ஜியோ மார்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐடி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது இ-காமர்ஸ் நிறுவனங்களும் கொத்து கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றனர். நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இரண்டே காரணங்கள் தான் - தேவையில்லா செலவுகளை குறைப்பது மற்றும் லாபத்தை அதிகரிப்பது. இ-காமர்ஸ் தளமான ரிலையன்ஸ் ஜியோ மார்ட் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் வரவிருக்கும் வாரங்களில், சுமார் 9,900 பதவிகளை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக தங்களின் கார்ப்பரேட் அலுவலகத்தில் 500 நிர்வாகிகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஏற்கனவே செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (பிஐபி) வைத்துள்ள நிலையில், மற்றொரு பெரிய அளவிலான பணிநீக்கங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ மார்ட் தளமானது மிகக்குறைந்த விலையில் பொருட்களை மக்களுக்கு தருகிறது. இதனால் தங்கள் விநியோகங்கள் பாதிக்கப்படும் என்று விநியோகஸ்தர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் நாளுக்கு நாள் போட்டி அதிகரிப்பதால் சில மாற்றங்களை கொண்டு வர ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, தங்களின் பூர்த்தி செய்யும் மையங்களில் [fulfillment centers] பாதிக்கும் மேற்பட்டவற்றை மூட திட்டமிட்டுள்ளது. அது மட்டும் இன்றி ரிலையன்ஸ் ரீடெய்ல், மெட்ரோ ஏஜி என்ற ஜெர்மன் சில்லறை விற்பனையாளரின் இந்திய வணிகத்தை வாங்கியது. அதற்காக $344 மில்லியன் செலவானதாக தெரிவித்துள்ளது. JioMart இந்த மாற்றங்களைச் செய்வதற்கு இது மற்றொரு காரணம் என்று கருதப்படுகிறது.

Show comments

தொடர்பான செய்திகள்

அட்டகாசமான அம்சங்களுடன் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன்! | iQOO 12 5G Launched in India.

நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் சூப்பர் 5ஜி மொபைல்கள் | Upcoming Smartphones in November.

அட்டகாசமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன்! | OnePlus Open Launched in India.

அசத்தலான அம்சங்கள்...எதிர்பார்க்காத பட்ஜெட்டில்...எந்த பிராண்ட் தெரியுமா? | Itel S23 Plus Launch Date in India.