Priyanka Hochumin September 15, 2023
ஆண்ட்ராய்டு போன்களின் மவுசை பின்னுக்கு தள்ளி தற்போது அனைவரையும் பிரம்மிக்க வைத்தது ஐபோன் 15 சீரிஸ் தான். இதில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 என மொத்தம் 4 மாடல் அடங்கும். இதில் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை, அம்சங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம். இந்த மாடல் ஸ்மார்ட்போன் 60ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஹெக்ஸா கோர் ஆப்பிள் ஏ16 பயோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது.
Priyanka Hochumin September 15, 2023
ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் தான் தற்போது உலகம் முழுவதும் முக்கிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேஸ் முதல் டாப் எண்ட் வரை மொத்தம் 4 வேரியண்ட் ஐபோன் 15 சீரிஸில் அடங்கும். அதில் பேஸ் மாடல் ஐபோன் 15-ன் முழு விவரங்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாடல் 60ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.1 இன்ச் OLED Super Retina XDR டிஸ்பிளே கொண்டு வருகிறது. இது ஹெக்ஸா கோர் ஆப்பிள் ஏ16 பயோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது.
Priyanka Hochumin September 15, 2023
ஐபோன் 15 சீரிஸின் அடுத்த டாப் மாடல் ஐபோன் 15 ப்ரோ பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. இதன் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட முழு விவரத்தையும் பற்றி பார்க்கலாம். இந்த மாடல் 120ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.1 இன்ச் OLED Super Retina XDR டிஸ்பிளே கொண்டு வருகிறது. ஐபோன் 14 மாடலில் இருக்கும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் ஐபோன் 15 ப்ரோவிலும் இடம்பெற்றுள்ளது. சுமார் 35 டிரில்லியன் செயல்பாடுகளுக்கான ஆதரவை அளிக்கும் ஏ17 ப்ரோ சிப் மூலம் இயங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது iOS 17 அடிப்படையில் இயங்குகிறது.
Priyanka Hochumin September 14, 2023
தற்போது அனைவரின் பேச்சாக இருப்பது ஐபோன் 15 சீரிஸ் ரிலீஸ் பற்றி தான். ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு பலரின் ஆர்வம் இருந்தாலும், ஐபோன் என்று வந்தால் சொல்லவா வேண்டும். நம்மால் வாங்க முடியாவிட்டாலும் அதனைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்று தான் பலர் நினைக்கின்றார்கள். அந்த வகையில் உலகின் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஐபோன் 15 சீரிஸ் ஸ்பெக் பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin September 13, 2023
இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் ஆகப்போகும் iqoo 12 ஸ்மார்ட்போன் பற்றிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த போனின் பேஸ் மாடல் பற்றிய அம்சங்கள் கசிந்துள்ளது அதனை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 2K ரிசொல்யூஷன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் Samsung E7 AMOLED டிஸ்ப்ளேவுடன் வரலாம். மேலும் Qualcomm Snapdragon 8 Gen 3 SoC, Adreno 750 GPU உடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Priyanka Hochumin September 12, 2023
இந்தியாவில் பிரபல பிளிப்கார்ட் இ-காமெர்ஸ் தளத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் Infinix Zero 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனின் விலை, அம்சங்கள் மற்றும் பிளிப்கார்ட்டில் எப்படி ஆர்டர் செய்தால் குறைந்த விலையில் நம்மால் வாங்க முடியும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,2160Hz PWM டிம்மிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட ஆதரவுகளுடன் வந்துள்ளது.
Priyanka Hochumin September 11, 2023
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ் காத்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒன்பிளஸ் 11R என்னும் மாடல் மறுபெயரிடப்பட்டு ஒன்பிளஸ் ஏஸ் 2 என்று உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே போல், தற்போது ஒன்பிளஸ் 12R என்னும் மாடலை மறுபெயரிடப்பட்டு ஒன்பிளஸ் ஏஸ் 3 ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் போனின் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Priyanka Hochumin September 11, 2023
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான பிராண்ட்டாக திகழ்வது நோக்கியா. அந்த வகையில் இன்று நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் இருக்கும் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள், விலை போன்ற விஷயத்தை பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin September 08, 2023
Xiaomi நிறுவனம் லேட்டஸ்ட் Xiaomi 13டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த நிகழ்வானது Xiaomi-ன் அதிகாரபூர்வ வலைத்தளமான mi.com இல் நேரடியாக ஒளிபரப்பாகிறது. Xiaomi 13டி சீரிஸில் சியோமி 13டி மற்றும் சியோமி 13டி ப்ரோ ஆகிய இரண்டும் அடங்கும். இந்த பதிவில் Xiaomi 13டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை, அம்சம் மற்றும் விவக்குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
Priyanka Hochumin September 04, 2023
ஹானர் நிறுவனத்தின் புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போன் வரும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே அமேசான் தளத்தில் ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு என்று தனி வலைத்தள பக்கத்தை உருவாகியுள்ளது. ஒன்பிளஸ் மாடலைப் போலவே ஹானர் 90 ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த போனின் விலை, அம்சம் மற்றும் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.