August 04, 2023
July 04, 2023
July 04, 2023
10:45 AM - 11:45 AM
-
10:45 AM - 11:45 AM
-
1:30 PM - 3:00 PM
9:00 AM - 10:30 AM
6:00 AM - 7:30 AM
சப்தமி
தைலம்
தெற்கு
சம நோக்கு நாள்
06:03 கா / AM
சொல்லுங்க மக்களே!
இந்த 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருந்தது?
September 21, 2023
September 21, 2023
September 20, 2023
சென்னை: ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் பகிர்வது நிறுத்தப்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலான் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் நெட்ஃப்ளிக்ஸில் உலகின் பல்வேறு நாடுகளில் உருவாகும் வெப் சீரிஸ்கள் முதல் படங்கள்வரை ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் அந்த தளத்துக்கு பயனர்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதேசமயம் மற்ற ஓடிடி தளங்களைவிடவும் நெட்ஃப்ளிக்ஸின் சந்தா கொஞ்சம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். உதாரணமாக நெட்ஃப்ளிக்ஸின் ஒரு மாத சந்தாவுக்கு 149 ரூபாய் (மொபைல் ப்ளான்) வசூலித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்துக்கு 1,788 ரூபாய் வசூலிக்கிறது. மேலும் பேஸிக் ப்ளானாக ஒருவர் மட்டும் பார்ப்பதற்கு ஒரு மாதத்துக்கு 199 ரூபாயும், வருடத்துக்கு 2,388 ரூபாயும் வசூலிக்கிறது. அதேபோல் ஸ்டாண்டர்ன் ப்ளானாக இரண்டு பேர் பார்க்க ஒரு மாதத்துக்கு 499 ரூபாயும், 5,988 ரூபாயும், ப்ரீமியம் ப்ளானாக (அல்ட்ரா ஹெச்.சி) நான்கு பேர் பார்ப்பதற்கும் மாதம் 649 ரூபாயும், வருடத்துக்கு 7,788 ரூபாயும் வசூலித்துக்கொண்டிருக்கிறது. இதனால் இவ்வளவு பணம் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸை சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதன் காரணமாக ஒருவர் மட்டும் சப்ஸ்க்ரைப் செய்து பாஸ்வேர்டை மற்றொருவருக்கு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. சப்ஸ்க்ரைபர்கள் தொடர்ந்து இப்படி செய்வதால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தடுத்திருக்கிறது. அதன்படி, ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “பாஸ்வேர்டை ஷேர் செய்திருக்கும் பயனர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல் பேஸிக் ப்ளானில் Ad Free அம்சம் புதிய பயனர்களுக்கும், ஏற்கனவே அந்த ப்ளானில் இருந்து விலகி மீண்டும் இணைய விரும்பும் பயனர்களுக்கும் நிறுத்தப்படுகிறது. தற்போது இருக்கும் சப்ஸ்க்ரைப்பர்களுக்கு மட்டும்தான் அது பொருந்தும். கனடாவில் அந்த முறை செயல்படுத்தவும்பட்டுவிட்டது. அதனையடுத்து அமெரிக்காவிலும் ப்ரிட்டனிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த வருடத்தின் வருவாய் புதிய பயனர்களின் மூலம்தான் அதிகரித்திருக்கிறது. இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில் இயக்க லாபம் மட்டும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதை இந்த வருடத்தின் முழுமைக்கும் அதிகரிக்கவும் திட்டம் தீட்டியிருக்கிறோம்” என கூறியுள்ளது.
இந்தியாவில் சும்மா வேற லெவல் அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது கவாஸாகி நிஞ்ஜா ZX-4R. சுமார் ரூ.8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் டூரரை விட காஸ்டிலியாம். அப்படி கவாஸாகி பைக்கில் எந்த மாறியான அம்சங்கள் இருப்பதால் இவ்ளோ விலை என்று தெரிந்துகொள்ளலாம். இது பேஸ், ஹையர் ஸ்பெக் SE மற்றும் ZX-4RR என மொத்தம் மூன்று வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கவாஸாகி நிஞ்ஜா ZX-4R இன் பேஸ் வேரியண்ட் மட்டும் அறிமுகமாகியுள்ளது.
Iravaadhan
பெங்களூரு : தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
Iravaadhan
தெற்காசிய கால்பந்து போட்டி; இறுதிப்போட்டிக்கு ஜோராக முன்னேறியது இந்திய அணி
Mugunthan Velumani
கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்து அசத்தல்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!
Sekar
இந்தியாவின் பழம் பெரும் கால்பந்து வீரர் காலமானார்!!
Sekar
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.. ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!!
Mugunthan Velumani
இந்திய ஹாக்கி அணியின் போராட்டம் வீண்..! காலிறுதி சுற்றுக்கு செல்ல மேலும் ஒரு போட்டி..!
Mugunthan Velumani
உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணியின் நிலை..?? வாழ்வா..! சாவா..! இறுதி லீக் போட்டி ..!
Sekar
ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையின் முதல் போட்டி இன்று.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
Sekar
இந்திய ஹாக்கி சம்மேளனத்திற்கு புதிய தலைவர்.. பொருளாளர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர் தேர்வு!!
Sekar
சவிதாவின் அதிரடி.. வீழ்ந்தது கனடா.. இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!!