Mon ,Feb 26, 2024

சென்செக்ஸ் 72,892.05
-250.75sensex(-0.34%)
நிஃப்டி22,142.65
-70.05sensex(-0.32%)
USD
81.57

ராகு-கேது பெயர்ச்சி 2023

ராகு கேது காயத்ரி மந்திரம்.. எத்தனை முறை சொல்ல வேண்டும்? | Rahu Ketu Gayatri Mantra in Tamil

Nandhinipriya Ganeshan July 04, 2023

நம்மில் பலரும் பல முயற்சிகள் செய்து ஒரு விஷயத்தை ஆரம்பித்து ஏதாவதொரு காரணத்தினால் காரியம் பாதியில் நின்று விடும் அல்லது முடிக்கும் தருணத்தில் தடைபட்டு போகும். எடுத்துக்காட்டாக, திருமண தடை, குழந்தை தடங்கல், வேலை கிடைப்பதில் தடங்கல், சொந்த வீடு கட்டுவதில் தடங்கல் அல்லது புதுத்தொழில் தொடங்குவதில் தடங்கல் என்று அடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முக்கிய காரணம் சர்ப்ப தோஷம் என்றழைக்கப்படும் ராகு கேது தோஷம் தான். ஜோதிட ரீதியாக சர்ப்ப தோஷம் என்பது மிக முக்கியமான ஒரு தோஷம் ஆகும். ராகு கேது எந்த இடத்தில், எந்த கிரகங்களுடன் உள்ளதோ அந்த கிரகங்களை தன் வசம் செய்து விடும் ஆற்றல் பெற்றவை. ராசி அதிபதியை, நட்சித்திர அதிபதியை என அனைத்தையும் தன் வசம் செய்து கொள்ளக் கூடியவை. மேலும் தன்னை பார்க்கும் கிரகங்களையும் தன் வசம் செய்து விடும் வல்லமை பெற்றது தான் இவ்விரு கிரகங்களும். இதனால் யதார்த்தமாக நம்முடைய தினசரி வாழ்வில் நடக்க வேண்டிய பல விஷயங்களில் பிரச்சனைகளை தரக்கூடியது. எனவே, ராகு கேதுவுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை கூறி வருவதன் மூலம் அவற்றின் பாதிப்பில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம். ராகு காயத்ரி மந்திரம்: ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம அஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரசோதயாத் கேது காயத்ரி மந்திரம்: ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத் எப்படி சொல்ல வேண்டும்? உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோயிலில்களில் உள்ள நவக்கிரக சன்னதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக சென்று, ராகு பகவானுக்கு சிவப்பு நிற மலர்கள் சமர்ப்பித்து, கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுப் பதார்த்தத்தை நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி ராகு பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். அதேபோல், கேது பகவானுக்கும் சனிக்கிழமைகளில் காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளாக சென்று, மலர்கள் சமர்ப்பித்து, கொள்ளு நைவேத்தியம் வைத்து, நெய்தீபம் ஏற்றி கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 அல்லது 1008 முறை துதித்து வருவதால் கேது பகவானின் தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரம் முதல் அதிகபட்சம் 27 வாரம் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற இயலும்.

ராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்க மந்திரம்.. எப்படி சொல்ல வேண்டும்? | Rahu Ketu Moola Mantra in Tamil

Nandhinipriya Ganeshan July 04, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேது ஒருவரது ஜாதகத்தில் நிலை கெட்டிருக்கும்போது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக, கேது பகவான் சனி பகவானின் அம்சம் நிறைந்தவராக இருப்பதால் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். தற்போது ராகு - கேதுவால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் பற்றி பார்க்கலாம்.  ராகு மூல மந்திரம்:  ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா எப்படி சொல்ல வேண்டும்? மிகவும் சக்தி வாய்ந்த ராகு பகவானின் இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், ராகு பகவானை மனதில் நினைத்துக் கொண்டு 108 முறை அல்லது 1008 முறை துதிக்க வேண்டும். மேலும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வருகின்ற ராகு கால நேரத்தில் அருகில் உள்ள சிவ ஆலயங்களுக்கு சென்று, நவகிரக சன்னதியில் இருக்கும் ராகு பகவானுக்கு சிறிதளவு குதிரை கொள்ளு சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி இந்த மூல மந்திரத்தை துதித்து வந்தால் ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் குறையும்.  குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் தீய குணமுடைய நபர்கள் விலகுவார்கள். எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். நீண்ட நாட்களாக கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்கும். கேது மூல மந்திரம்:  ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம்  ஸெள: ஸ்வாஹா எப்படி சொல்ல வேண்டும்? கேது பகவானுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் 9 அல்லது 27 முறை துதிக்க வேண்டும். மேலும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று, நவகிரக சன்னதியில் உள்ள கேதுவின் சிலைக்கு சங்கு பூக்களை வைத்து, உளுந்து சமர்ப்பித்து, இந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவதால் பிற உயிரினங்கள் குறிப்பாக பாம்புகளை கொன்றதால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். நெடுநாட்களாக இருக்கும் நோய்ப்பிணி நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இருந்துவந்த தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த நிதி சிக்கல்கள் நீங்கும். எதிர்பாரா உதவிகளும், நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

ராகு கேது தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? | Rahu Ketu Dosha Marriage Match in Tamil

Nandhinipriya Ganeshan June 06, 2023

ராகு-கேது தோஷம் என்பது ஒருவர் ஜாதகத்தில் அவர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், விருப்பங்கள், வியாபாரம் உள்ளிட்டவற்றில் நிலையானதாக இல்லாமல், அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய ஒன்றாகும். பொதுவாக, ராகு-கேது குடும்பத்தை அமைத்துக்கொடுக்க கூடிய பாகங்களில் அதாவது, ஒருவருடையை ஜாதகக் கட்டத்தில் 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் அமர்வதால் ஏற்படுவதே ராகு-கேது தோஷம். இந்த இடங்களில் ராகு-கேது அமர்வதால் அந்த ஜாதக்காரர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்துக் கொண்டே இருக்கும். அதாவது, ராகு-கேது தோஷம் உடையவர் நிலையான எண்ணங்களும், செயல்பாடுகளும் இல்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்ளும் சுபாவம் படைத்தவர்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் மனதில் கற்பனைக்கு எட்டாத கனவுகளையும், புதுவிதமான ஆசைகளையும் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய பேச்சு இனிமை உடையாதாக இருந்தாலும், சில நேரங்களில் மற்றவர்களுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கூடியதாகவும் இருக்கும். இவர்களுக்கு நண்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள். எதிலும் புதுமையை தேடும் பழக்கம் கொண்ட இவர்கள் அனைவரிடத்திலும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும் சுபாவம் கொண்டிருப்பார்கள். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் இவர்கள் செய்யும் காரியங்கள் சில சமயங்களில் பலவிதமான இன்னல்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். மேலும், மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் இவர்களுக்கு சுத்தமாகவே இருக்காது. தனக்கு என்ன தோன்றுகிறதோ, எது பிடிக்கிறதோ அதையே செய்வார்கள். அதேபோல், இந்த தோஷம் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், தனக்கு பிடித்தாற் போலவும் வாழ வேண்டும் நினைப்பவர்கள். அதாவது, கஷ்டத்திலும் சொகுசாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ராகு கேது தோஷம் இருப்பவர்கள் சுத்த ஜாதகரை திருமணம் செய்யலாமா? ஆனால், சுத்த ஜாதகம் (தோஷம் இல்லாதவர்) கொண்டவர் இவர்களுக்கு அப்படியே எதிர்மறையான குணம் படைத்தவர்கள். அதாவது, அவர்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் எப்போதும் ஒரு நிலைப்புத்தன்மை இருக்க வேண்டும் நினைப்பார்கள். மேலும், இவர்கள் எந்த விஷயத்திலும் எந்த சூழ்நிலையிலும் புதுமைகளை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில், சுத்த ஜாதகத்தார் ராகு-கேது தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்துக் கொள்ளும்போது இவர்களின் எண்ணங்கள் சரியான விதத்தில் ஈடுசெய்ய முடியாமல் போகிறது. அங்கு தான் வெறுப்பு, கருத்து வேறுபாடு, பிரிவினை என்பது ஆரம்பமாகிறது. அதேபோல், தோஷம் உள்ளவர்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக பேசும் சில பேச்சுக்கள், தோஷம் இல்லாதவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துவிடுகிறது. தோஷம் இல்லாதவர்கல் சில நேரங்களில் விட்டுக்கொடுத்து அனுசரித்து கொண்டாலும், மனதளவில் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பொதுவாக, தோஷம் உள்ளவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் உடையவர்கள். இதனால் தனக்கு வேண்டியதையும், தனக்கு பிடித்ததையும் மட்டுமே செய்ய விரும்புவார்கள். இது இறுதியில் பிரிவில் சென்று முடிந்துவிடுகிறது. இதனால் தான், நம் முன்னோர்கள் ராகு-கேது தோஷம் உள்ளவர்களுக்கு அதே தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்து வைக்க கூறினார்கள். ஏனென்றால், தோஷம் உள்ளவர்களின் குணமும் எண்ணமும் ஒரே மாதிரியாக இருக்கும். அதேபோல், ஒருவருடைய பேச்சு இன்னொருவரின் பேச்சு இணையாக இருப்பதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் எளிதில் நீங்கிவிடும்.

ராகு கேது பெயர்ச்சி 2023.. யாருக்கு விடியல் விமோசனம் வரும்? | Rahu Ketu Peyarchi 2023 Palangal in Tamil

Nandhinipriya Ganeshan June 05, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும்  ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மீன ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.. | Meenam Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan June 02, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மீன ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம். மீனம் ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025: எப்போதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை கவரக்கூடியவர்கள் மீனம் ராசியினர். நீங்க வரும் நாட்களில் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களிடையே தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பதும், சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த நவீன பொருட்களை வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் எதிலும் சற்று சிக்கனத்துடன் இருப்பது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் குறைந்து லாபம் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொலைதூர பிராயணங்களை தவிர்க்கவும். பணி/வேலை: உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடம் மாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும், முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. அரசியல்வாதிகளை பொறுத்தவரை, மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கலைஞர்களுக்கு உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து திறமைகளை வெளிப்படுத்த முடியும். தொழில்/வியாபாரம்: தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத சில சிக்கல்கள் வந்து சேரும். அசையா சொத்துக்களை பராமரிப்பதற்காக சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். சந்தையில் விலைப் பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். தக்க நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். எதிலும் நீங்கள் முன் நின்று செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியம்: மனைவி பிள்ளைகளுக்கு உண்டாகக்கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் வீண் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதும் நல்லது. குடும்பம் வாழ்க்கை: பெண்களுக்கு கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதும், கணவர் வழி உறுப்பினர்களிடம் பேச்சில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூல பலன்களை அடைய முடியும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். மாணவ மாணவியர்கள் கல்வியில் கவனமாக செயல்பட்டால் முன்னேற்றத்தை அடைய முடியும். திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்: ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்பது அதிர்ஷ்டக் கிழமை: வியாழன், ஞாயிறு, அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் சிவப்பு பரிகாரம்: பரிகாரமாக விநாயகரை வழிபடுவதும், செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது. கருப்பு எள், போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது மிகவும் நல்லது.

தேவையற்ற சகவாசத்தை தவிர்ப்பது நல்லது...பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் |Kumbam Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Priyanka Hochumin June 01, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

தொழிலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்..! வேலை மாற்றத்தால் இது உங்களுக்கு நடந்தே தீரும்.. | Magaram Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Gowthami Subramani May 31, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும். ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மகர ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

இந்த விஷயத்துல கட்டுபாடோடு இருந்தால் வீண் சிரமத்தை தவிர்க்கலாம்.. | Dhanusu Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan May 30, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம். தனுசு ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025: தனுசு ராசி சுயநலமின்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக் கூடியவர்கள். இருந்தாலும் இனி எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தற்போது இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதும் நல்லது. சிலருக்கு நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த மனக்கவலைகள் விலகி சமுதாயத்தில் கௌரவமான நிலை கிடைக்கும். பணி/வேலை: பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும் பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத்துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் 2023 ஜனவரிக்குப் பிறகு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில்/வியாபாரம்: தொழில் வியாபாரத்தில் தற்போது உள்ள வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டு நீங்கள் சற்று கடினமாக உழைத்தால் படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். அதிக மதிப்புள்ள முதலீடுகளை தள்ளி வைக்கவும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தற்போது சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் ஜனவரி முதல் தொழிலில் சிறப்பான நிலையை அடைவீர்கள். கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். உடல் ஆரோக்கியம்: உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். சிறு பாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது. நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு வயிறு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருங்கள். மேலும், முடிந்தவரை இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள். குடும்பம் வாழ்க்கை: பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கைகூடும் வாய்ப்பு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியை உண்டாகும். தற்போது உள்ள கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி சேமிக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதார நிலை மேன்மையடையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள், மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும், அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் நல்லது. மேலும், கருப்பு ஆடைகள் அல்லது கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

கடன் பிரச்சனைகள் குறையும்...குடும்பத்தில் வாக்கு வாதத்தை குறைப்பது நல்லது..!|Viruchagam Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Priyanka Hochumin May 29, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி விருச்சக ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

முன் கோபத்தை குறைத்தால் பிரச்சனை குறையும்.. | Kanni Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan May 27, 2023

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம். கன்னி ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025: கன்னி ராசி நேயர்களுக்கு முன் கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். முக்கியமான முடிவுகளை சிந்தித்து எடுக்கவும். வேகம் என்பதை விட விவேகம் மிகவும் அவசியம் தேவை. மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். ஆடம்பர சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வழக்கு நிமிர்த்தமாக சில விரயங்கள் உண்டாகும். பணி/வேலை: உத்தியோகப் பணிகளில் புதிய நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் பணியில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பெண்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். மனதளவில் இருந்து வந்த சோர்வு குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். ராகு கேது பெயர்ச்சியின் மூலம் இழுபறியான நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். மற்றவர்களிடம் பேசும் போதும் பேச்சுகளில் கவனமும் கனிவும் தேவை. அரசியல்வாதிகள் கட்சி நிமித்தமான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படவும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதினால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். தமக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வீர்கள். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் இருக்கவும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில்/வியாபாரம்: வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு பணியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். வேலையாட்களால் ஏற்பட்ட தடை தாமதங்கள் குறையும். தொழில் நிமித்தமான பயணங்களில் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதேபோல், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர், விவசாயிகளுக்கு லாபகரமான சூழல் உண்டாகும். வேலை ஆட்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சந்தை நிலையை அறிந்து பயிர் விளைச்சலை மேற்கொள்வது லாபத்தை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியம்: ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். குடும்ப வாழ்க்கை: சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் காலதாமதத்திற்கு பின்பு நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகள் வழியில் இருந்து வந்த மனவருத்தம் மற்றும் கவலைகள் குறையும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லவும். சிலருக்கு உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு விதமான தயக்க உணர்வுகள் குறையும். புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர இழுப்பறியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.