Mon ,Mar 27, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 உங்க ராசிக்கு என்ன நடக்கும்? | Guru Peyarchi 2023 Rasi Palan

Nandhinipriya Ganeshan February 28, 2023

வியாழன் கிரகமே தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அப்படிப்பட்ட குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார்.  அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மீன ராசியினருக்கு அதிர்ஷ்ட மழைதான்.. ஆனா இது மட்டும் வேண்டாம்.. | Meenam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 28, 2023

குரு பகவான் உங்க ராசிக்கு சுய ஸ்தானத்திலிருந்து 2வது வீடான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். 12 வருடங்களுக்கு பிறகு உங்க ராசிக்கு 2வது இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பல நன்மைகளை அளிக்கவுள்ளார். பொருளாதார ரீதியான தட்டுப்பாடு, தடை, தாமதம் விலகி முன்னேற்றம் ஏற்படும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். இருப்பினும், விரைய சனி காலம் என்பதால், விரைய செலவுகள் அதிகரித்தே காணப்படும். அதாவது, வரவு இரு மடங்காக இருந்தால் ஒரு மடங்கு செலவுக்கே போய்விடும். எனவே, பார்த்து பக்குவமாக செலவுகளை செய்ய வேண்டும். வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 26, 2023

குரு பகவான் உங்க ராசிக்கு 2வது வீட்டிலிருந்து 3வது வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். ஏற்கனவே ஜென்ம சனி காலக்கட்டம் ஆரம்பம், தற்போது குரு பகவானும் சரியில்லாத இடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். எனவே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குரு பகவான் 3வது வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தைரிய குறைவு ஏற்படும், எதிலும் தயக்கம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் ரீதியாக அடிக்கடி சிக்கல் வரும். சிலருக்கு ஏற்கனவே வேலை செய்துக்கொண்டிருந்த இடத்தைவிட்டு இடமாற்றம் செய்யவோ அல்லது அந்த வேலையைவிட்டு விலகக்கூடிய சூழ்நிலையும் வரும்.

12 ராசிக்காரர்களுக்கு உண்டான குரு பெயர்ச்சி பரிகாரங்கள்.. | Guru Peyarchi 2023 Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan February 26, 2023

வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார்.  அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், குரு பெயர்ச்சிக்கு பிறகு 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.

அர்த்தாஷ்டம குருவால் மகர ராசிக்கு சாதகமா? பாதகமா? | Magaram Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 25, 2023

குரு பகவான் உங்க ராசிக்கு 3வது வீட்டிலிருந்து 4வது வீட்டான அர்த்தாஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். கடந்த ஒருவருட காலமாகவே 3ல் குரு பகவானின் சஞ்சாரம் இருந்ததால், எதிலும் தடை தாமதம், ஏமாற்றம், மனக்குழப்பம், எந்த செயலை செய்வதற்கும் பயம், அடிக்கடி உடல் ஆரோக்கியம் சரியில்லாமல் போவது, பிடித்த வேலை கிடைக்காமல் திண்டாட்டம், பண நெருக்கடி என பல சவால்களை சந்திந்திருப்பீர்கள். ஆனால், தற்போது இந்த அர்த்தாஷ்டம குருவால் பல பிரச்சனைகள் பாதியாக குறையும். இருந்தாலும் இந்த அர்த்தாஷ்டம ஸ்தானம் என்பது தாயார் ஸ்தானம் என்றும் சொல்வார்கள். எனவே, இந்த காலக்கட்டத்தில் தாயாருடன் வாக்குவாதம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

12 வருடங்களுக்கு பிறகு குருவின் சஞ்சாரத்தால் தனுசு ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. | Dhanusu Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 24, 2023

குரு பகவான் உங்க ராசிக்கு 4வது வீட்டிலிருந்து 5வது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். ஏற்கனவே சனிப்பெயர்ச்சியின் போது ஏழரை சனியின் பிடியிலிருந்து தப்பித்த தனுசு ராசியினர் இப்போது அர்த்தாஷ்டம குருவின் பிடியிலிருந்தும் தப்பிக்க போகிறீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும் குரு பகவானால், ராகு பகவானால் ஏற்பட்ட கெடுபலன்கள் அனைத்தும் குறைய தொடங்கும். தடைப்பட்டு நின்ற திருமண முயற்சிகள் விரைவில் நடந்து முடியும். காதல் உறவில் இருப்பவர்கள் தம்பதிகளாவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இந்த முறை நிச்சயம் குழந்தை பாக்கம் கிட்டும்.

என்னடா இது விருச்சிக ராசிக்கு வந்த சோதனை.. கஷ்ட காலம்.. | Viruchigam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 23, 2023

குரு பகவான் உங்க ராசிக்கு 5வது வீட்டிலிருந்து 6வது வீடான ருனரோக சத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார். குரு பகவான் ருனரோக சத்திர ஸ்தானத்தில் அமருவது என்பது விருச்சிக ராசியினருக்கு சிறப்பு கிடையாது. ஏற்கனவே அர்த்தாஷ்டம சனி காலம் உங்களுக்கு ஆரம்பித்துக்கும் வேளையில், குரு பகவானும் ராசிக்கு சரியில்லாத இடத்தில் அமரப் போகிறார். குருவும் சனியும் சரியில்லாத இடத்தில் இருக்கிறார்கள்; எனவே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 6வது வீட்டில் அமரும் குரு பகவானால் விருச்சிக ராசியினர் உடல் ஆரோக்கிய ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியற்ற சூழ்நிலையில் இருப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பத்தால் மிகவும் வருத்ததோடே காணப்படுவீர்கள். 

7ல் குரு பகவான்.. அதிர்ஷ்ட காலம் பொறந்தாச்சு துலாம் ராசியினரே.. | Thulam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 23, 2023

குரு பகவான் உங்க ராசிக்கு 6வது வீட்டிலிருந்து 7வது வீட்டிற்கு பெயர்ச்சியாக உள்ளார். இனி உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் பிறக்கிறது என்றே சொல்லலாம். 7வது கலஸ்த்திர ஸ்தானம் என்பதால் இழந்தவை எல்லாம் மீண்டும் கிடைக்கும். அர்த்தாஷ்டம சனியின் பிடியில் சிக்கி படாதுபாடு பட்டிருந்த துலாம் ராசியினருக்கு ஏற்கனவே சனி பெயர்ச்சியால் 50% விடிவு காலம் பிறந்திருக்கும். இப்போது குருபகவானும் உங்க ராசிக்கு சிறப்பான இடத்தில் அமர இருப்பதால் அதிர்ஷ்டம் தான்.

அஷ்டம குருவால் கன்னி ராசிக்கு வரப்போகும் ஆபத்து.. | Kanni Guru Peyarchi Palan 2023 - 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 17, 2023

வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார். அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், கன்னி ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் யார்? தட்சிணாமூர்த்தி யார்? யாரை எப்படி வழிபட வேண்டும்? | Dakshinamoorthy Guru Bhagavan Difference in Tamil

Nandhinipriya Ganeshan February 02, 2023

நம்மில் பலரும் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்து குழம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இருவரும் ஒன்று கிடையாது. தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு. பெரும்பாலானோர் கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்கு பதிலாக தட்சிணாமூர்த்தியை வணங்கி, பரிகார பூஜைகளை செய்து வருகின்றனர். குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற வஸ்திரத்தை தட்சணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், குருகிரக நைவேத்தியப் பொருட்களாக கொண்டை கடலை மாலை, கொண்டை கடலை சாதம் போன்றவற்றை தட்சிணா மூர்த்திக்கு நிவேதனம் செய்கிறார்கள்.