Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அசத்தலான அம்சங்கள்...எதிர்பார்க்காத பட்ஜெட்டில்...எந்த பிராண்ட் தெரியுமா? | Itel S23 Plus Launch Date in India

Priyanka Hochumin Updated:
அசத்தலான அம்சங்கள்...எதிர்பார்க்காத பட்ஜெட்டில்...எந்த பிராண்ட் தெரியுமா? | Itel S23 Plus Launch Date in IndiaRepresentative Image.

இந்திய சந்தையில் மிகவும் மலிவான விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. அப்படியாக சிறந்த அம்சங்கள், குறைந்த விலையில் ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போனின் விலை, அம்சங்கள் ஆகிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.  

Itel S23 Plus விவரக்குறிப்புகள்

ஐடெல் எஸ்23 பிளஸ் ஸ்மார்ட்போன் உள்ளே 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவாக திகழ்கிறது. அத்துடன் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஐடெல் ஓஎஸ் 13 கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி616 12என்எம் சிப்செட் கொண்டு இயங்குகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொறுத்த வரையில், 50 எம்பி சூப்பர் கிளியர் (Super-Clear) மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா ஆகிய டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. இந்த மெயின் கேமராவில் 10X Zoom, ஐ டிராக்கிங் மோட், சூப்பர் நைட் மோட், போர்ட்ராய்டு லைட் மோட் (Portrait Lite Mode) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 8எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா செட்டப் அளிக்கப்படும். இந்த ஐடெல் மாடலில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் ஆக மொத்ததில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வரவிருக்கிறது. 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏச் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் Elemental Blue மற்றும் Lake Cyan ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் சப்போர்ட் வருகிறது. இதில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாலி - ஜி 57 எம்பி1 (Mali-G57 MP1) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000/-க்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்