முன்விதை நிதியாக 1 மில்லியன் டாலரைத் திரட்டிய தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம்.!

தமிழகத்தில் உணவுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமே Cookr ஆகும். இந்நிறுவனம், தற்போது தமிழகம் தாண்டி பல்வேறு மாநிலங்களில் தங்களது சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது முன் விதை சுற்றில் 1 மில்லியன் டாலரைத் திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

Cookr நிறுவனம்

கடந்த 2022 ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் சமைத்த உணவுகளை வழங்குவதற்காக பிரபா சந்தான கிருஷ்ணனா, சரவணக் குமார் கந்தசாமி மற்றும் நிர்மல் குமார் போன்றோரால் தொடங்கப்பட்டது. தற்சமயம், இந்நிறுவனம் தனது சேவையில் 500 சமையல்காரர்களைக் கொண்டு வேலை செய்வதாகக் கூறப்படுகிறது. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வீட்டு சமையல்காரர்களை பணியமர்த்துவதாகத் திட்டமிட்டுள்ளது.
 

பல்வேறு மாநிலங்களில்

மேலும், தற்போது கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஒசூர், தஞ்சாவூர், சிதம்பரம், வேலூர், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இந்த Cookr நிறுவனம் செயல்படத் தொடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல்வேறு மாநிலங்களிலும் தனது சேவையை விரிவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது. கூடுதல் அம்சங்களைச் சேர்க்கவும், திறமையான ஊழியர்களை பணியமர்த்தவும், குழுவை விரிவுபடுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன் விதை நிதி

இது குறித்து கூகுலில் வெளிவந்ததாவது, ஏஞ்சல் முதலீட்டார்களால், Seed Funding நடத்தப்பட்டது. இதில் முன் விதை நிதிச் சுற்றில் Cookr நிறுவனம் 8.25 கோடி மதிப்புள்ள 1 மில்லியன் டாலரைத் திரட்டியுள்ளது. இது இவர்களது எதிர்காலத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
 

மகிழ்ச்சியான செய்தி

இணை நிறுவனர் பிரபா சந்தான கிருஷ்ணன் சமீபத்திய வளர்ச்சியைப் பற்றி பேசியுள்ளார். இதில், அவர் இந்த முன் விதை நிதியைப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார். மேலும், இது வீட்டு சமையல்காரர்களின் வாழ்க்கைக்கு நற்பயன்களை அளிக்கும் எனவும் கூறினார். மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை வழங்குதலுக்கு உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் நீண்ட ஆயுட்கால உணவுப் பொருள்களின் தேவை அதிகமாக இருப்பதும் கூறப்படுகிறது. எனவே, இதனைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இதற்கான தீர்வு Cookr நிறுவனம் தருவது மகிழ்ச்சியடையச் செய்வதாகக் கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனத்துடன் Cookr

Cookr குறித்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாட்டு மேலாளர் அருண் விஸ்வநாதன் கூறுகையில், "Cookr நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் ஆரோக்கியமான உணவு வழங்கும் வசதியை அளிப்பதாக உள்ள இந்நிறுவனத்தின் நோக்கத்தை ஆதரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் கூறியுள்ளார். மேலும், ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதற்கு Cookr நிறுவனத்தில் புதுமையான வழிமுறை மார்க்கெட்டிற்குத் தேவையானது என்றும், இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதுடன் அவர்கள் வெற்றி பெறவும் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் Cookr நிறுவனமானது Pickmyad நிறுவனத்துக்கு 1.3 கோடியை முன் விதை நிதியாக அளித்தது குறிப்பிடத்தக்கது.

Show comments

தொடர்பான செய்திகள்

1.5 மில்லியன் டாலர் விதை நிதி திரட்டிய தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் | Tamil Nadu Startup Frigate raises Seed Fund.

கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வாங்கிய முன்னணி தனியார் நிறுவனம்.. எத்தன கோடி தெரியுமா?.

Sequoia India நிறுவனம் 'Peak XV Partners' என்று மாற்றம்...காரணம் இது தானா? | Sequoia India Rebrands as Peak XV Partners.

முன் விதை நிதி பெற்ற டிக்கெட் 9 ஸ்டார்ட் அப் நிறுவனம்..! எவ்வளவு தெரியுமா..? | Ticket 9 Pre-seed Funding.