Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

முன் விதை நிதி பெற்ற டிக்கெட் 9 ஸ்டார்ட் அப் நிறுவனம்..! எவ்வளவு தெரியுமா..? | Ticket 9 Pre-seed Funding

Gowthami Subramani Updated:
முன் விதை நிதி பெற்ற டிக்கெட் 9 ஸ்டார்ட் அப் நிறுவனம்..! எவ்வளவு தெரியுமா..? | Ticket 9 Pre-seed FundingRepresentative Image.

இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை உயர் நிலைமைக்குக் கொண்டு வர அயராது உழைத்து வருகின்றனர். அதே சமயம், சிறந்த நிறுவனத்தை உருவாக்க அவர்களுக்கு முதலீடும் தேவைப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திறமையை வெளிக்கொணரவும், அவர்களுக்கு உதவும் வகையிலும் விதை நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான Ticket 9 நிறுவனம் லட்சக்கணக்கான டாலரை முன் விதை நிதியாகப் பெற்றது.

Ticket 9 ஸ்டார்ட்-அப் நிறுவனம்

Ticket 9 நிறுவனம் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் பிரேம்ராஜ் ஆகியோரால் நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனம், Event Tech SaaS Platform-ஐக் கொண்ட நிறுவனம் ஆகும். இந்த Platform ஆனது, நிகழ்வுகளை உருவாக்க, நிர்வகிக்க, ஊக்குவிக்க மற்றும் Monetise செய்யும் தளமாகும். மேலும், இது எந்த வகை மற்றும் அளவிலான நிகழ்வுகளையும் உருவாக்குவதற்கான Tools-களை வழங்குகிறது. தற்சமயம், மும்பை, புனே, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் போர்டிங் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

Ticket 9 முன் விதைநிதி

புதுவித முயற்சியால், மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் லட்சக்கணக்கிலான டாலரை முன் விதை நிதியாகப் பெற்றுள்ளது. அதன் படி, Ticket 9 நிறுவனம் பெற்ற முன் விதைநிதியானது $1,20,000 ஆகும். ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இருந்து இந்த முன் விதை நிதியை திரட்டியுள்ளது.

முதலீட்டாளர்களில் bitsCrunch நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO விஜய் பிரவின் மகாராஜன், CTO அசோக் வர்தராஜன், M2P இணை நிறுவனரான பிரபு ரங்கராஜன், Ippopay நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆன மோகன் கே, CTO ஜெய்குமார், க்ரோஃபினின் AI மற்றும் ML-ன் தலைவர் சுடலை ராஜ்குமார், டெலிவர்.எஸ்ஜி இணை நிறுவனர் கிருஷ்மணி கண்ணன், Witree’s CTO செல்வமுத்துக்குமார், வில்கோசோர்ஸ் இணை நிறுவனர் சுந்தரராமன் ராமசாமி போன்றோர் அடங்குவர்.

இது குறித்து வெளிவந்த கருத்துப்படி, இந்நிறுவனம் தனது தயாரிப்பு வளர்ச்சியை மேம்படுத்த மற்றும் தொழில்நுட்ப ஸ்டாக், குழு, மற்றும் சந்தை விரிவாக்கத்தை வலுப்படுத்துதல் போன்றவற்றிற்கு நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், டிக்கெட் 9 நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரேம்ராஜ் கூறியதாவது, “ஈவென்ட் இன்டஸ்ட்ரியில் டிக்கெட் 9 நிறுவனமானது பணிகளை எளிமைப்படுத்தவும், தன்னிச்சையாக இயங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்