Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

1.5 மில்லியன் டாலர் விதை நிதி திரட்டிய தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் | Tamil Nadu Startup Frigate raises Seed Fund

Priyanka Hochumin Updated:
1.5 மில்லியன் டாலர் விதை நிதி திரட்டிய தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் | Tamil Nadu Startup Frigate raises Seed FundRepresentative Image.

கேபிடல்-ஏ, ஜாவா கேபிடல் மற்றும் பிற ஏஞ்சல் முதலீட்டாளர்களின் பங்கேற்புடன், அராலி வென்ச்சர்ஸ் தலைமையிலான உற்பத்தி ஸ்டார்ட்அப் ஃப்ரிகேட், 1.5 மில்லியன் டாலர்களை விதைச் சுற்றில் திரட்டியுள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழினியன் வசந்தன், கார்த்திகேயன் பிரகாஷ், சந்திரசேகர் சி மற்றும் இனியவன் வசந்தன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ஃப்ரிகேட். திருச்சி மற்றும் சென்னையை தளமாகக் கொண்ட ஃப்ரிகேட், நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு உற்பத்தி சேவைகளை வழங்க ஆரம்பித்தது. நியூ எனர்ஜி மற்றும் பவர், உள்கட்டமைப்பு, EV செக்டர்ஸ் மற்றும் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரீஸ் ஹெவி ஃபேப்ரிகேஷன், ஷீட் மெட்டல், காஸ்டிங்ஸ், ஃபோர்ஜிங்ஸ் மற்றும் இன்ஜெக்ஷன் மோல்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. அத்துடன் அதில் சிறந்து விளங்கி, கைத்தேர்ந்த நிறுவனமாக வளம் வர தொடங்கியது.

அவர்களின் சேவைகளை வழங்குவதற்காக - கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர், ஜாம்நகர், லூதியானா, கோலாப்பூர் மற்றும் கோலார் போன்ற 2 tier நகரங்களில் அமைந்துள்ள ஃப்ரிகேட்டர்ஸ் எனப்படும் 200க்கும் மேற்பட்ட உற்பத்தி பங்குதாரர்களுடன் ஃபிரிகேட் கூட்டு சேர்ந்துள்ளது. ஃபிரிகேட் இந்த கூட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவுவதுடன், அவர்களின் திறனை உலகளவில் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 2022 இல் விதைக்கு முந்தைய சுற்றில் $185,000 ஃபிரிகேட் நிதி திரட்டியது. தங்களின் கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஃப்ரிகேட் இரண்டாவது சுற்று நிதியுதவியாக ஜூலை 2023 இல் 1.5 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது அனைவரையும் வியப்படைய செய்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்