Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வாங்கிய முன்னணி தனியார் நிறுவனம்.. எத்தன கோடி தெரியுமா?

Nandhinipriya Ganeshan Updated:
கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வாங்கிய முன்னணி தனியார் நிறுவனம்.. எத்தன கோடி தெரியுமா?Representative Image.

1965 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மற்றும் நடராஜன் என்ற இரண்டு சகோதர்களால் நிறுவப்பட்டு தற்போது முன்னணி பழங்கள் மற்றும் காய்கறி சில்லறை விற்பனை நிறுவனமாக வலம் வருவதுதான் 'கோவை பழமுதிர் நிலையம்'. 1960 களில் தனது தந்தையை இழந்த இந்த இரண்டு சகோதர்களும் குடும்பத்தை நடத்துவதற்காக, 9 மற்றும் 11 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டனர். 

பிறகு, கோயம்புத்தூர் பேருந்து நிலையங்களில் தள்ளு வண்டியில் பழச்சாறு, பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்ய தொடங்கினார்கள். சுமார் ஐந்து வருடம் போராடி இரண்டு சகோதர்களும் 1965 ஆம் ஆண்டு வெறும் 300 முதலீட்டில் தங்களுடைய முதல் கடையை திறந்தனர். அந்த கடைக்கு 'பழமுதிர் நிலையம்' என்று பெயரிட்டனர். அங்கு நியாயமான விலையின் அடிப்படையில் பொருட்களை டஜனுக்கு பதிலாக எடையாக விற்பனை செய்யப்பட்டன. 

ஆரம்பத்தில் பழச்சாறு விற்பனை சரிவை கண்டாலும், பழசாறு தண்ணீர் சேர்க்கப்படாமல் கூழாக இருந்தது வாடிக்கையாளர்களிடம் பெற தொடங்கியது. இந்த இருவர்களின் எழுச்சி, தொழில்முனைவோர் புனைவு மற்றும் விடாமுயற்சியின் பயனாக 2012 ஆம் ஆண்டு கேபிஎன் ஃபார்ம் ஃப்ரஸ் [KPN Farm Fresh] நிறுவனம் முறையாக நிறுவப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் முன்னணி பழங்கள் மற்றும் காய்கறி சில்லறை விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் கையில் 60 சதவீத பங்குகள் வைக்கப்பட்டு, மற்றவை பங்குதாரர்களுக்கு முறையாக பிரித்துக்கொடுக்கப்பட்டது.

கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வாங்கிய முன்னணி தனியார் நிறுவனம்.. எத்தன கோடி தெரியுமா?Representative Image

மேலும், கோயம்புத்தூரில் 20,000 சதுர அடியில் கிடங்கு ஒன்றையும், சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள வானகரத்தில் 1.5 லட்சம் சதுர அடியில் கிடங்குகளையும் கொண்டுள்ளது. இப்போது நடராஜனின் மகன் செந்தில் நடராஜன் தான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார். ரூ.400 கோடி வருவாய் மற்றும் லாபத்துடன், தமிழ்நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள கேபிஎன் நிறுவனம், தற்போது மற்ற மாநிலங்களிலும் தனது கடைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்காவை தளமாக கொண்ட பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. 70 சதவீதம் போக மீதமுள்ள 30 சதவீத பங்குகள் கேபிஎன் நிறுவனத்திடமே இருக்கும். நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜனே பொறுப்புகளை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. மேலும், வேதா கார்ப்பரேட் அட்வைசர் தான் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையேயான புதிய ஒப்பந்தத்திற்கு ஆலோசனை வழங்கியது தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்