ரமலான் 2023 நோன்பு வரலாறு மற்றும் முக்கியத்துவம் | Ramdan 2023 Story in Tamil

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நண்பர்கள் அனைவரும் இந்த ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து அல்லாஹ்வை வணங்கி தொழுவார்கள். புனித மாதமாக அவர்கள் கடைபிடிக்கும் இந்த ரமலான் மாதத்தில் எதனால் இவ்வளவு கடினமான நோன்பை கடைபிடிகின்றனர், அதுவும் ஏன் குறிப்பாக இந்த மாதத்தில் கடைபிடிக்கின்றனர், இதற்கு பின் இருக்கும் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரமலான் கொண்டாட காரணம்?

நம்மை போலவே இஸ்லாமியர்கள் தங்களுக்கான நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர். அந்த இஸ்லாமிய காலண்டர் படி, ரமலான் மாதம் புனித மாதமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. காரணம்? அந்த மாதத்தில் தான் இறைதூதர் முஹமதிடம், அல்லாஹ் வானவ தூதர் ஜிப்ரியில் குரானை தந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர் தான் மனிதர்கள் குரான் மூலமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.

யாரெல்லாம் நோன்பு இருக்க வேண்டும்?

இந்த புனித ரமலான் மாதத்தில் மனதளவிலும், உடலளவிலும் பருவம் அடைந்த இஸ்லாமியர்கள் [ஆண், பெண்] அனைவரும் இந்த நோன்பை கடைபிடிக்க வேண்டும். இதில் சில காரணங்களின் அடிப்படையில் சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பருவம் அடையாத சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள் தவறவிட்ட ஒரு நோன்பிற்காக யாராவது ஒரு ஏழைக்காகவாது உணவு தந்து உதவ வேண்டும்.

ரமலான் நோன்பின் போது மாதவிடாய் நேரத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாதவிடாய் முடிந்த பின்னர் நோன்பை மேற்கொள்ளலாம். தவறவிட்ட நாட்களை பின்னர் சரி செய்துக் கொள்ளலாம்.

நோன்பு இருக்க காரணம்!

இஸ்லாமியர்களை பொறுத்த வரையில் முக்கியமான 5 கடமைகள் உள்ளது. அதில் ஒன்று தான் நோன்பு இருப்பது. இது அல் ஹிஜ்ரா 2ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்களின் கடமையாக்கபட்டுள்ளது. ஏனெனில் அல் ஹிஜ்ரா என்பது "இடம்பெயர்வு" என்பது அர்த்தம். இறைதூதர் முஹமது அவர்கள் தன்ணை பின்பற்றுபவர்களுடன், தான் பிறந்த மக்கா நகரிலிருந்து மதினா நகரை நோக்கி செல்லும் போது எதிரிகளின் சதிகளிலிருந்து பாதுகாத்துகொள்ள இடம்பெயர்ந்தார் என்று கூறப்படுகிறது.

நோன்பு இருக்கும் காலங்களில் அதிகாலை எழுந்து தொழுகையை (சுபுஹு) அடிப்படையாக வைத்து தொடங்கபடும். மாலையில் சூரிய அஸ்தமனம் வேலையில் (மக்ரிபு) நோன்பு முடிவடையும். இதே போல் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு கடைபிடிக்கப்படும். மற்ற வேளைகளில் குரான் ஓதுவது, உணவு எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும், எச்சில் விழுங்க கூடாது. மேலும் தராவிஹ் (இரவு வணக்கம்) தொழுகை மிக முக்கிய பிராத்தனையாகும். இது ஒவ்வொரு இஷா தொழுகைக்கு பின்னரும் நடைபெரும்.

நோன்பு இருப்பதன் முக்கியத்துவம்

நோன்பு இருப்பது நமக்கு பக்குவத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறது. மேலும் உணவு இல்லாமல் வாழும் மக்களின் உணர்வுகளை நம்மை உணர செய்கின்றது. அதனால் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு புரிய வைக்கின்றது.

நோன்பு காலங்களில் உணவில் கட்டுப்பாடு இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அதே போல உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கின்றது.

இப்படி அனைத்து விஷயங்களில் மூலமாக அல்லாஹ்வின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். ரமலான் முடியும் நேரத்தில் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் ஜக்காத் அல் பித்தர் என்ற பெயரில் ஏழை எளியவர்களுக்கு உதிவி செய்வார்கள். அது ஏன் என்றால், ரமலான் கொண்டாட முடியாத மக்களுடன் கொண்டாடும் ஒரு வாய்ப்பாகும். மேலும் அவர்களுக்கு அது மிகப்பெரிய உதவியாகவும் இருக்கும். 

Show comments

தொடர்பான செய்திகள்

27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரங்கள்...! | 27 Natchathiram Trees in Tamil.

கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது...மீறினா என்ன நடக்கும் தெரியுமா? | Karungali Malai Uses in Tamil.

விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம்.. | Vinayagar Chaturthi 2023 Date and Timings.

செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி பூஜை எளிமையான முறையில் செய்வது எப்படி? உகந்த நேரம்.. | Varalakshmi 2023 Pooja Procedure in Tamil.