பெற்றோர்கள் சொல்வதை கூட கேட்காமல் இருப்பார்கள், ஆனால் ஒருவருக்கு பிடித்த பிரபலங்கள் என்ன செய்தலும் அதை அப்படியே திரும்ப செய்யும் கோஷ்டிகள் நிறைய இருக்கின்றனர். அந்த வகையில், சமீப காலமாக தமிழ் திரையுலகின் பிரபலங்கள் பலரும் கருங்காலி மாலையை அணிந்துள்ளனர். அதனை பார்த்து தாங்களும் கருங்காலி மாலை அணிந்தால் அவர்களைப் போல் பிரபலமாகி விட்டுவோம் என்ற நம்பிக்கையில் பலரும் அணிந்து வர தொடங்கியுள்ளனர். ஆனால், நிஜமாகவே கருங்காலி மாலையை அணிந்தால் நல்லது நடக்குமா? என்பதைப் பற்றி பார்க்கலாம்.
கருங்காலி என்றால் என்ன?
இறைவனின் படைப்பில் கருங்காலி என்பது வறட்சியைத் தாங்கி வளரும் ஒரு தாவரமாகும். அது உலகின் வெப்பம் மிகுந்த ஆப்பிரிக்கா காடுகளில் இருக்கிறது. இந்த மரம் இயல்பாகவே கார்பன் எனப்படும் கரித்தன்மையை தனக்குள் வாங்கி சேமித்து வைக்கும் மரபை கொண்டுள்ளது. அந்த தன்மையால் கருங்காலி மரத்தாண்டாகி பின்னர் உறுதியான மரமாகிறது. இப்படியாக இயற்கையின் ஆற்றலை தன்னுள் வாங்கி வரும் கருங்காலி மரத்தை சரியாக பயன்படுத்தினால், அது தன்னுள் இருந்து நல்ல கதிர் ஆற்றலை வெளிப்படுத்தும் என்றும் பலரும் தெரிவிக்கின்றனர்.
யார் யார் கருங்காலி மாலை அணியலாம்?
ஒருவரின் ஜாதகப்படி கருங்காலியின் பலன் அவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிந்தால் மட்டும் பயன்படுத்துங்கள். ஏனெனில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் விருட்சங்கள் மாறுபடும். அந்த வகையில் கருங்காலி மரமானது மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு உகந்ததாகும். எனவே, முறையாக ஜோதிடரின் வழிகாட்டுதலைப் பெற்று யாகங்கள் நடத்தி சரியான கருங்காலி மாலையை அணிந்து பயன் பெறலாம்.
அப்படி அணிவதால் என்ன நன்மை?
நம்மை சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி விலகும். நல்ல தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிக்க முடியும். நமக்கு வரவிருக்கும் இன்னல்களை தள்ளி வைக்கலாம். செய்யும் முயற்சிக்கு கூடுதல் பலனை அளிக்கும். அதே போல், ஒருவரின் கிரகநிலைக்கு நேர்மறையாக கருங்காலி மாலை இருந்தால் அது அவர்களின் எதிர்மறை பலன்களை அளிக்க கூடும். எனவே, தெளிவாக யோசித்து செயல்படுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…