Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி பூஜை எளிமையான முறையில் செய்வது எப்படி? உகந்த நேரம்.. | Varalakshmi 2023 Pooja Procedure in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி பூஜை எளிமையான முறையில் செய்வது எப்படி? உகந்த நேரம்.. | Varalakshmi 2023 Pooja Procedure in TamilRepresentative Image.

ஈசனின் சொற்படி அன்னை பார்வதி திருமகள் லட்சுமி தேவியை நினைத்து விரதம் இருந்த திருநாளே இந்த வரலட்சுமி விரதமாகும். இந்த விரதம் எப்படி இருக்க வேண்டும்? அதன் பலன்கள் என்னென? மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக இப்பதிவில் காணலாம்.

வரலட்சுமி விரதம் 2023 பலன்:

வரலட்சுமி விரதம் என்றாலே நமக்கு தெரிந்தது பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், செல்வம் செழிக்க செய்யும் வழிபாடு என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த விரதம் எண்ணற்ற பல நன்மைகளை அளிக்கும் விரதமாகும். முக்கியமாக பதினாறு வகை செல்வங்களையும் அளிக்கும் விரதம் இந்த வரலட்சுமி ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பின்பற்றப்படும்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் இந்த விரத முறை, முதன் முதலில் அன்னை பார்வதி தேவி திருமகளான லட்சுமி தேவிக்கு விரதம் இருந்ததால், முருக அவதாரம் தோன்றியதாக புராணக் கதைகளும் உண்டு. மிகவும் சுபிட்சமான இந்த விரதத்தை நாம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் ஆகும்.

வரலட்சுமி விரத முறை:

வரலட்சுமி நாளுக்கு முந்தின நாளே வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். பின்னர், வரலட்சுமி விரதன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் சாமிக்கும்பிட்டு விட்டு விரதத்தை துவங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு உட்கொள்ளக் கூடாது. தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் இடையில் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

வரலட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்:

கலசம், மஞ்சள், குங்குமம், சந்தனம், நெல், பச்சரிசி, பூ, எலுமிச்சை பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் (மற்ற பழ வகைகளும் சேர்த்து கொள்ளலாம்), வாழை இலை, நோன்பு கயிறு மற்றும் தீபாராதனை பொருட்கள் (கற்பூரம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவை).

வரலட்சுமி பூஜை முறை:

முதலில் வீட்டில் கிழக்கு திசையில் (ஈசானி மூலையில்) ஒரு உயரமான மரபலகை வைத்துக் கொள்ளவும். பலகையின் மேல் கோலமிட்டு கொள்ளவும். அம்மனுக்கு சிவப்பு கலர் உகந்தது என்பதால், சிவப்பு துணி ஒன்றை அதை பலகையில் விரித்துவிடுங்கள். பின்னர், அந்த துணியின் மீது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளவும். 

அதன்பிறகு, ஒரு கிண்ணத்தில் மஞ்சள், சந்தனம் போன்றவற்றை பன்னீர் விட்டு கலக்கிக்கொள்ளவும். இப்போது சாமி படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, வண்ண மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். இன்னொரு பலகையை அந்த படத்திற்கு முன்புறமாக வைத்து அதன்மீது கோலமிட்டு வாழை இலை வைத்து அதில் பச்சரிசி அல்லது நெல் போட்டுக்கொள்ளவும். பிறகு, மஞ்சளால் ஒரு விநாயகர் செய்து வைக்கவும்.

இப்போது பச்சரிசியிட்ட இலையில் ஒரு வெள்ளி அல்லது செம்பு கலசம் வைத்து, அதை மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், கலசத்திற்குள் சிறியளவு பச்சரிசி, விரளி மஞ்சள், எலுமிச்சம்பழம், ஏலாக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஒன்பது நாணயம் அல்லது ஒரு தங்க நாணயம் மற்றும் கதோள கருகுமணி போட்டுக்கொள்ளவும். 

அந்த கலசத்திற்கு சிவப்பு கலர் துணியைக் கொண்டு அலங்கரித்து கொள்ளவும். இறுதியாக மஞ்சள் பூசிய தேங்காய் மற்றும் மாவிலையைக் கலசத்தின் உச்சத்தில் வைக்க வேண்டும். இந்த தேங்காயின் மேல் நோன்பு கயிறுகளை வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு, உங்களால் முடிந்த நைவேத்தியம் ஒன்றையும் படைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் வைத்து கொள்ளவும். 

விளக்கேற்றி, தீப ஆராதனை செய்து குடும்பத்தில் பெரியவர்களிடம் ஆசி பெற்று கொண்டு, அந்த நோன்பு கையிற்றை திருமணமான பெண்கள் கழுத்திலும், திருமணமாகாத பெண்கள் வலது கையில் கட்டிக் கொள்ளலாம். இந்த பூஜை காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் செய்யலாம். நீங்கள் எப்போது பூஜையை முடிக்கின்றீர்களோ அதன்பிறகு உணவருந்தி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

பூஜை செய்ய உகந்த நேரம்:

வெள்ளிக்கிழமை அன்று 25.08.2023 அன்று காலை 09:00 மணி முதல் 10:00 மணி வரை மற்றும் மாலை 06:00 மணிக்கு மேல் பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்