Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,699.80
712.77sensex(0.98%)
நிஃப்டி22,421.30
220.75sensex(0.99%)
USD
81.57
Exclusive

விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம்.. | Vinayagar Chaturthi 2023 Date and Timings

Nandhinipriya Ganeshan Updated:
விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம்.. | Vinayagar Chaturthi 2023 Date and TimingsRepresentative Image.

இறைவழிபாட்டில் முதல் வழிபாட்டு உரியவரும், காணாபத்தியத்தின் முழுமுதற் கடவுளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவருக்கு பிள்ளையார், கணபதி, ஆனைமுகன், லம்போதரன், மூத்தோன், கந்தபூர்வசர், ஓங்காரன், பிரணவன், வேழமுகன், கஜமுகன் என் பல பெயர்கள் உள்ளன. விநாயகப் பெருமானுக்கு உரிய சிறந்த விரத நாட்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று.

விநாயகர் சதுர்த்தி 2023 எப்போது?

அனைத்து தெய்வங்களுக்கும் முதல்வனாக வழிபடும் விநாயகப் பெருமான் பிறந்த நாளையே 'விநாயகர் சதுர்த்தி' என்று ஆண்டுதோறும் ஆவணி - புரட்டாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் செப்டம் 18 ஆம் தேதி திங்கட்கிழமையும், வடமாநிலங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் கொண்டாடப்படுகிறது.

பூஜைக்கு உகந்த நேரம் என்ன?

இந்து நாட்காட்டியின்படி, விநாயக சதுர்த்தி 2023 செப்டம்பர் 18, திங்கட்கிழமை மதியம் 12:39 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 19 செவ்வாய்கிழமை இரவு 8:43 மணிக்கு முடிவடையும். மேலும், விநாயகர் சதுர்த்தி பூஜை முஹுரத்தம், செப்டம்பர் 19, செவ்வாய்கிழமை காலை 11:01 மணிக்கு தொடங்கி பிற்பகல் 01:28 வரை நீடிக்கும். முக்கியமாக, விநாயகர் சதுர்த்திக்கு ஒரு நாள் முன்னதாக நிலாவை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்